என்கிட்ட இருக்கிற ஒரே குறை இதுதான்! கவுண்டமணி எட்டி மிதிச்சுட்டாரு.. ராமராஜன் உடைத்த ரகசியம்
சென்னை: நடிகர் ராமராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நடிகர் கவுண்டமணி கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடந்து கொண்ட விதம் குறித்தும் ராமராஜன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த ராமராஜனை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்துவிட முடியாது. பல வருடங்களுக்கு இப்போது மீண்டும் சாமானியன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் ராமராஜன் தொடர்ச்சியாக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அதில் ஒரு சேனலில் என்னுடைய வாழ்க்கையில் குறை என்றால் ஒன்றே ஒன்றுதான் என்று சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் ராமராஜன் பேசுகையில் நான் எத்தனையோ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன் ஆனால் சில திரைப்படங்களில் நான் அதிகமாக சாப்பிடுவது போன்ற காட்சிகள் வைத்திருப்பார்கள். அது உண்மையில் என்னுடைய கேரக்டரே கிடையாது.
நான் இருக்கிறதை சாப்பிடுவேன். அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படுறவன் கிடையாது. சாப்பாடு விஷயத்தில் நான் எதையும் ஒதுக்கி வைக்க மாட்டேன். ஆனால் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட மாட்டேன். ஆனால் நான் நடித்துக் கொண்டிருந்த வரைக்கும் எனக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் வரவில்லை. நடிப்பை விட்டு எம்பி ஆக மாறிய பிறகுதான் எனக்கு அப்ரண்டீஸ் ஆப்ரேஷன் செய்யப்பட்டிருந்தது.
அந்த ஆபரேஷனுக்கு பிறகு நான் இப்போது இருக்கிற நிலைமையில் இருப்பதே பெரிய விஷயம்தான்.
எனக்கு இருக்கிற ஒரே குறை என்னுடைய உடல்வாகுதான். எல்லோரும் என்னை ராமராஜன் ரொம்ப குண்டாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்லுவார்கள். அது மட்டும் தான் எனது குறையாக தெரிகிறது. ஆனாலும் நான் இப்படி இல்லை என்றால் என்னைக்கோ போய் சேர்ந்திருப்பேன் என்று ராமராஜன் எமோஷனல் கலந்தபடி பேசி இருக்கிறார்.
அதோடு கரகாட்டக்காரன் திரைப்படம் அனுபவம் குறித்தும் ராமராஜன் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் சூட்டிங் ஸ்பாட்டில் கவுண்டமணியும் செந்திலும் இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும். இருவரும் சும்மாவே எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். திரைப்படத்தில் வருவது எல்லாம் கால்வாசி தான். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் இதைவிட அதிகமாக நடக்கும்.
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நான் கனகாவை பார்க்க முடியவில்லை என்று சோகமாக ஒரு காட்சியில் இருப்பேன். அப்போது என்னுடைய தங்கச்சி எனக்கு குடிக்க காபி கொடுப்பாங்க. அதை நான் வேண்டாம் என்று சொல்ல கவுண்டமணி கொடு நான் குடுக்கிறேன் என்று சொல்லுவார். அதையும் நான் குடிக்காததால் அங்கு பக்கத்தில் வைத்து இருப்பார். அப்போது அங்கே வரும் செந்தில் அதை சுற்றி வந்து தெரியாத்தனமாக எடுத்து குடிக்க வரும்போது கவுண்டமணி எட்டி மிதித்து விடுவார்.
இது உண்மையிலேயே அந்த ஸ்பாட்டில் நடந்தது தான். செந்தில் சுற்றி வந்து நாம் எடுத்தால் ஷாட்டில் தெரிய மாட்டோம் என்று அவர் செய்தது தத்ரூபமான காட்சியாக மாறிவிட்டது. அந்த காட்சியை இப்போது நான் படத்தில் பார்த்தாலும் சிரித்து விடுவேன். அதுபோல டப்பிங் பேசும்போது கூட செந்தில் கவுண்டமணி பேசின பிறகு தான் பேசுவார். காரணம் நான் முன்னாடி பேசினா அண்ணன் ஏதாவது எடக்கு முடக்குமா பேசுவாரு. அதனால அவரு முதலில் பேசிட்டு வரட்டும் என்று சொல்லிடுவாரு என்று அந்த பேட்டியில் ராமராஜன் பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications