காதல் கடைசி வரைக்கும் நீடிக்கும்னு சொல்ல முடியாது! தலைக்கனம் வரக்கூடாது! நடிகர் ராமராஜன் ஓப்பன் அப்
சென்னை: நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்கு பிறகு சினிமாவிற்கு திரும்பி இருக்கும் நிலையில் 23 வருடங்களுக்கு பிறகு அவர் நடிக்கும் "சாமானியன்" திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராமராஜன் காதல் மற்றும் திருமணம் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் ராமராஜன் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அதிலும் பல நடிகர்கள் 100 படங்கள் நடித்து வாங்காத பெயரை குறைவான படங்கள் நடித்து ராமராஜன் பெற்றிருந்தார். அதிலும் அவருடைய காலகட்டத்தில் நடிகர் ரஜினி, கமல் போன்றோர் முன்னணி நடிகர்களாக இருந்தபோது அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை ராமராஜன் வைத்திருந்தார்.

ஆனால் ராமராஜன் சினிமாவில் அறிமுகமான ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நளினியின் வீட்டில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்ற போது நளினி தன்னுடைய வீட்டின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி இதற்கு ராமராஜனை திருமணம் செய்திருந்தார்.
திருமணத்திற்கு பிறகு ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் பிறகு சில சூழ்நிலைகளால் இவர்கள் இருவரும் பிரிய வேண்டிய நிலை வந்தது. அப்போது நளினி தன்னுடைய குழந்தைகளை தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று விட்ட நிலையில் ராமராஜன் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து
இருந்தார். ஆனாலும் நளினி தன்னுடைய குழந்தைகளை தானே கஷ்டப்பட்டு வளர்த்ததாக பல இடங்களில் கூறியிருக்கிறார்.
இப்ப வரைக்கும் ராமராஜனை நான் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால் தான் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை என்றும் நளினி கூறியிருந்தார். இப்படியான நிலையில் ராமராஜன் சமீபத்தில் பேட்டியில் காதல் மற்றும் திருமணம் குறித்து பேசி இருக்கிறார். அதில் காதல், அன்பு இதில் இரண்டுக்குமே வித்தியாசம் இருக்கிறது. அன்பு நம்முடன் பிறந்தவர்கள், நம்மை பிடித்தவர்கள், நண்பர்கள் மீது வருவது.
காதல் நம்முடைய நெருக்கமானவர்கள் மீது வருவது. அந்த காதல் இருவரிடம் இருந்தும் வர வேண்டும். சம்பந்தப்பட்ட இருவருக்கும் அந்த காதல் வரவேண்டும். ஆனாலும் அந்த காதல் நீண்ட நாட்கள் நிலைக்குமா? என்று சொல்ல முடியாது. ஒரு சிலருக்கு அந்த காதல் திருமணத்தில் சேரலாம். ஒரு சிலருக்கு அந்த திருமணத்திற்கு பிறகும் கூட காதல் மாறுபடலாம். சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவருக்கு அந்தக் காதலில் மாற்றம் ஏற்பட்டால் கூட இன்னொருவர் விலகி விடுவது நல்லது தான் என்று ராமராஜன் கூறியிருக்கிறார்.
அதோடு நான் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதிகமான திரைப்படங்களில் நடித்த நடிகர்களுக்கு இணையாக பேசப்பட்ட போது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் தலைக்கனம் வந்ததே கிடையாது. இப்போதும் நான் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இருக்கிறேன். என்னை பார்க்கும் ரசிகர்கள் உங்களைப் பார்க்கும்போது என்னுடைய அண்ணன் போல இருக்கு, தம்பி போல இருக்கு, மாமா போல இருக்கு என்று சொல்லுறாங்க.
இது எனக்கு கிடைத்த வரம் என்று தான் சொல்லுவேன். அதுபோல சினிமாவில் இப்போது வரும் நடிகர்களும் தலைக்கனம் இல்லாமல் இருக்க வேண்டும். யாராயிருந்தாலும் ஒரு வெற்றி கிடைத்து விட்டால் அதை தலையில் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று ராமராஜன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications