முத்து படத்தில் நான் ரஜினியாக டூப்.. என் கோட்டை கழட்டிட்டு அவர் சொன்னது! ரமேஷ் கண்ணா எமோஷனல்
சென்னை: நடிகர் ரமேஷ் கண்ணா தான் உதவி இயக்குனராக இருக்கும்போது முத்து திரைப்படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த்க்காக தான் டூப் போட்ட போது ரஜினிகாந்த் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகிறது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இதற்கு கேமராவுக்கு பின்னாடி பல பேருடைய உழைப்பு இருக்கிறது. ஒரு இயக்குனர் ஒரு திரைப்படத்தை தான் நினைத்த மாதிரி இயக்க வேண்டும் என்றால் தன்னிடம் உதவி இயக்குனராக இருப்பவர்கள், நடிகர், நடிகைகள், பாடல் ஆசிரியர்கள் என்று எல்லோரையும் பாடாய்படுத்தி எடுத்து விடுவார்.

அவ்வளவு சிரமப்பட்டு பலர் உழைப்பிற்கு பிறகுதான் மக்கள் எதிர்பார்க்கிறபடி புதுவிதமான கதை அம்சத்தோடு ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகிறது. அதே நேரத்தில் அப்படி திரைப்படங்கள் உருவாக்கும் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று இருக்கும். ஆனால் அது ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது. அது பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியே சொன்னால் தான் தெரியும்.
அது போல தான் ரமேஷ் கண்ணா தான் உதவி இயக்குனராக இருக்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்து இருக்கிறார். அதாவது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
அதுபோல அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருப்பார். அது மட்டும் அல்லாமல் ராதாரவி, சரத் பாபு, ரகுவரன், செந்தில், வடிவேலு என்று பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரிட் பாடல்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும். அதிலும் ஒருவன் ஒருவன் முதலாளி, தில்லானா தில்லானா, குழுவாயிலே, கொக்கு சைவ கொக்கு, விடுகதையா வாழ்க்கை போன்ற அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அனுபவங்கள் குறித்து தான் ரமேஷ் கண்ணா பகிர்ந்து இருக்கிறார். அதாவது இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இவருக்கு உதவி இயக்குனராக ரமேஷ் கண்ணாவும் இருந்திருக்கிறார். அப்போது ஒரு சீனில் ரஜினிகாந்த்க்கு டூப் போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதிலும் வயதான ரஜினிகாந்த் கோட்டில் வருவது போன்ற ஒரு காட்சியில் டூப் போட வேண்டும் என்று சொன்னதும் அதற்கு ஆள் இல்லாமல் இருந்திருக்கிறது.
உடனே அந்த கோட்டை போட்டுக்கொண்டு ரமேஷ் கண்ணா ரஜினி போல ரெடியாகி நடித்து விட்டாராம். பிறகு வந்த கே எஸ் ரவிக்குமார் அடுத்து ஷார்ட் ரஜினிக்கு வைக்க வேண்டும் அவருக்கு கோட் வேணும் என்று சொல்ல, அங்கு வேறு கோட் இல்லை என்பதை தெரிந்ததும் ரமேஷ் கண்ணா அதிர்ச்சி ஆகி இருக்கிறார். உதவி இயக்குனர் என்பதன்ஓடி ஓடி வேலை செய்ததால் உடம்பெல்லாம் வேர்வையாக இருக்க அந்த கோட்டிலும் வேர்வையாக இருந்திருக்கிறது.
இதை எப்படி ரஜினியிடம் கழட்டி கொடுக்க என்று பயந்து போன ரமேஷ் கண்ணா அந்த கோட்டை உடை வடிவமைப்பவரிடம் கொடுத்து இதில் ஸ்பிரே போடு, இல்லன்னா காய வைத்து ஏதாவது செஞ்சு ரெடி பண்ணு ரஜினி சார் வேற ரெடியா இருக்காரு என்ன பண்ணனும்னு தெரியல என்று அவசரப்படுத்த பின்னாடியே ரஜினி நின்று கொண்டிருந்திருக்கிறார்.
ரஜினி என்ன ஆச்சு என்று கேட்க, இல்லை சார் நான் உங்களுக்கு டூப் போட்டேன். இந்த கோட் எல்லாம் வேர்வையாய் இருக்கு என்று சொல்ல அது இருக்கட்டும் கொடுங்க என்று அந்த கோட்டை அப்படியே வாங்கி அவர் போட்டுவிட்டு நடித்து விட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று அந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா ரஜினி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications