அம்பிகா என்னுடைய மனைவி கிடையாது.. 2 பசங்க இருக்காங்க.. நடந்தது இதுதான்! நடிகர் ரவிகாந்த் விளக்கம்
சென்னை: நடிகை அம்பிகாவின் இரண்டாவது கணவர் ரவிகாந்த் என்று பரவி வந்த வதந்திகளுக்கு முதல்முறையாக நடிகர் ரவிகாந்த் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் நான் அம்பிகாவின் கணவர் கிடையாது என்ற ரவிகாந்த் அம்பிகா பற்றி சில தகவல்களையும் கூறி இருக்கிறார்.
நடிகை அம்பிகா 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலரோடு ஜோடியாக நடித்திருக்கிறார். நடிகை ராதாவின் அக்காவான அம்பிகா அந்த நேரத்தில் தன்னுடைய தங்கையோடு சேர்ந்து கூட பட படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் அம்பிகாவின் ஹேர் ஸ்டைலுக்கே அதிகமான ரசிகர்கள் உண்டு. புகழின் உச்சத்தில் இருக்கும்போது 1998 ஆம் ஆண்டில் பிரேம்குமார் என்ற நபரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

அதற்குப் பிறகு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சீரியலிலும் கவனம் செலுத்தி வரும் அம்பிகா அதிகமான சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் அவர் நாயகி சீரியலில் பெரிய அளவில் பேசப்பட்டார்.
தற்போது கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல அம்பிகா அவருடைய கணவர் பிரேம்குமாரை விவாகரத்து செய்து பிறகு நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்ததாக செய்திகள் அந்த நேரத்தில் அதிகமாக பரவி வந்தது. அது மட்டுமல்லாமல் அம்பிகாவின் விக்கிபீடியாவில் கூட அவருடைய இரண்டாவது கணவர் ரவி காந்த் என்றும் 2000 ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் பிறகு 2002 ஆம் ஆண்டில் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் இருக்கிறது.
ஆனால் இதை நடிகர் ரவிகாந்த் மறுத்திருக்கிறார். அது பற்றி ரவிகாந்த் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்தேன் என்று செய்திகள் பரவி வந்தது. ஆனால் அது உண்மையல்ல. அம்பிகாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். நாங்க ரெண்டு பேருமே பக்கத்து பக்கத்து வீட்டில் தான் குடியிருந்தோம்.
நான் அம்பிகாவோடு 16 படத்தில் நான்கு மொழிகளிலும் நடித்திருக்கிறேன். எல்லா படத்திலேயுமே நாங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறோம். அதுபோல நாங்க பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால் ஷூட்டிங்க்கு போகும்போது இரண்டு பேரும் ஒரே காரில் போயிருக்கிறோம். அதனால் சூட்டிங் ஸ்பாட்டில் எங்களை பார்த்ததும் அங்கிருப்பவர்கள் கிண்டலாக அதான் கணவன் மனைவி வந்துட்டாங்களே அவங்கள வச்சு அடுத்த ஷூட் தொடங்கிடுங்க என்று சொல்வார்கள்.
இதை பார்த்த பலர் தவறாக நினைச்சுட்டாங்க. உண்மையில் அம்பிகா என்னை திருமணம் செய்யவில்லை. நான் அவருடைய கணவரும் இல்லை. அந்தப் பொண்ணு பாவம் அவங்க அமெரிக்காவில் பிரேம் குமார் மேனன் என்பவரை கல்யாணம் செய்தார். அவருக்கு ராம்குமார், ரிஷி குமார் என இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். அவங்க நிம்மதியா இருக்கிறாங்க. அவங்களுக்கு சூட் வரும்போது வந்து நடிச்சிட்டு போவாங்க அவ்வளவுதான்.
ஆனால் தயவுசெய்து மக்கள் யாரும் வதந்திகளை நம்பாதீங்க. மக்கள் தான் செய்தி சேனலில் சொல்வதை எல்லாம் நம்பி விடுகிறார்கள். ஆனால் அது உண்மையே கிடையாது என்று ரவிகாந்த் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு ரவிக்குமார் காந்த் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அதோடு 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த ரவிகாந்த் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் காமெடியான திரைப்படங்கள் பலவற்றிலும் ரஜினிகாந்தை பார்க்க முடியும். அதிலும் கோவா திரைப்படத்தில் கிட்டத்தட்ட 13 வேடங்களில் நடித்திருக்கிறார்.
அதுபோல பிரியாணி, மங்காத்தா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்திருக்கிறார். பல சேனல்களில் நடித்து இருந்தாலும் சன் டிவியில் வம்சம் சீரியலில் சிவராம் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்தான் அம்பிகாவின் கணவர் என்று பரவி வந்த வதந்திகளுக்கு ரவிகாந்த் இப்போது விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications