ரோபோ சங்கர் மனைவிக்கு மருமகன் கொடுத்த முத்தம்.. விளக்கம் கொடுத்த இந்திரஜா! கடைசியாக கேட்ட கேள்வி
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவிற்கு அவருடைய மாமா கார்த்திக்குடன் கடந்த மாதத்தில் திருமணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சென்னையில் ரிசப்ஷன் நடைபெற்றது. அப்போது ரோபோ சங்கரின் மருமகன் ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் இதுகுறித்து ரோபோ சங்கரின் மகள் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் தங்களைப் பற்றி தவறாக பேசி கமெண்ட் போடும் நபர்களிடம் சில கேள்விகளையும் கேட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ரோபோ சங்கர் வெள்ளித் திரையில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ரோபோ சங்கரின் மனைவியும் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். அதுபோல ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கரும் பிகில் திரைப்படத்தின் மூலம் பாண்டியம்மாவாக சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு சின்னத்திரைகளிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில்தான் இந்திரஜாவிற்கு அவருடைய மாமா தொடர்வோம் என்று அறக்கட்டளையை நடத்தி வரும் கார்த்திக் உடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் காதல் திருமணம் என்பதால் என்கேஜ்மென்ட் சில மாதங்களுக்கு முன்பே நடைபெற்று இருந்த நிலையில் திருமணம் மதுரையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சென்னையில் ரிசப்ஷன் நடைபெற்றது.
இந்த நிலையில் ரிசப்ஷனில் ரோபோ சங்கரின் மனைவிக்கு அவருடைய மருமகன் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதை பார்த்த பலரும் இவர்களை திட்டி கமெண்ட் போட்டு வந்தனர். அதோடு இது கலாச்சார சீரழிவு என்றும் பலர் கூறி வந்தனர். இப்படியான நிலையில் இதுகுறித்து ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் நாங்கள் பிளான் பண்ணி இப்படி போட்டோ எடுக்க வேண்டும் என்று எடுக்கவில்லை. நான் அக்காவுடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும்போது
என் அக்காவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கப் போனேன். அப்போது எதிர்பாராத விதமாக அக்கா திரும்பி விட்டார். அதனால் அவருடைய உதட்டில் முத்தம் கொடுப்பது போன்று போட்டோ வெளியாகிவிட்டது. ஆனால் இதை சிலர் எங்களை கேவலப்படுத்த வேண்டும் தவறாக பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் உதட்டில் முத்தம் கொடுத்து இருந்தால் கூட என்னுடைய அக்கா மனதிலும் தப்பான எந்த எண்ணமும் கிடையாது. என்னுடைய மனதிலும் தப்பான எண்ணம் கிடையாது. ஆனால் பார்க்கிறவர்களின் பார்வையில் தான் தப்பு இருக்கிறது. என்னை அவர் சொந்த தம்பியாக தான் சின்ன வயசிலிருந்து வளர்த்து வருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக தான் ரிசப்ஷனில் அந்த போட்டோ வெளியாகி இருக்கிறது.
ஆனால் நிஜத்தில் வீடியோவில் என்ன இருக்கிறது என்பதை பார்த்தவர்கள் போட்டோவை பார்த்து எங்களை திட்ட மாட்டார்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் போது இது குறித்து இந்திரஜா விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் இந்த புகைப்படத்தை பார்த்ததும் சிலர் அக்காவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து மானங்கெட்டவனே என்று சிலர் சொல்கிறார்கள். அது பார்க்கும்போது கடுப்பாகத்தான் இருக்கிறது.
அக்காவுக்கு தானே முத்தம் கொடுத்தார்? என்று அவர்களே சொல்லிவிட்டு அந்த உறவை ஆபாசமாக சித்தரிக்கிறார்கள். உண்மையில் சிலர் தங்களுடைய வீடியோவிற்கு வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இந்த போட்டோவை பெரிதுபடுத்தி கொண்டே இருக்கிறார்கள். மத்தபடி எங்களுடைய மனதில் எந்த தவறான சிந்தனைகளும் கிடையாது. அதனால் நாங்கள் எங்களைப் பற்றி வருகிற நெகட்டிவ் கமெண்ட்களை கண்டுகொள்கிறது கிடையாது என்று இந்திரஜா பேசியிருக்கிறார்.
அதோடு நாங்கள் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். அதனால் எங்களுடைய திருமணத்தை நாங்கள் சந்தோஷமாக கொண்டாடினோம். ஆனால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் தவறாக கமெண்ட்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் ஒருவேளை ஆரம்ப காலத்தில் எங்களை போல கஷ்டப்பட்டு முன்னேறி கொண்டு இருந்தால் இப்படி எல்லாம் தவறாக பேசுவார்களா? என்று இந்திரஜா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications