Sanjeev: நண்பன் விஜய்யுடன் நடித்தும் கைகூடாத கனவு! "அந்த வலி” இன்னும் இருக்கு! கண்ணீர் மல்க பேசிய சஞ்சீவ்
சென்னை: சினிமா உலகில் வாரிசுகளாக வருபவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை; அதேசமயம் சினிமா பின்புலமே இல்லாமல் உச்சம் தொடுபவர்களும் உண்டு. அந்த வகையில், பெரிய சினிமா பின்புலம் இருந்தும், தனது சினிமா கனவு நிறைவேறவில்லையே என்றுத் தற்போதும் வருத்தத்துடன் இருப்பவர், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்.
சின்னத்திரை ரசிகர்களிடையே மிகப்பிரபலமாக அறியப்பட்டாலும், வெள்ளித்திரையில் ஒரு பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என்ற தனதுக் கனவை பற்றி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கண்ணீர் மல்க பேசியது பலரையும் உருக வைத்துள்ளது.

சஞ்சீவின் சினிமா பின்புலம்
பலருக்கும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், நடிகர் விஜய்யின் லயோலா கல்லூரி நண்பர் என்பது மட்டுமே தெரியும். ஆனால், அவரதுப் பின்னணி மிகவும் ஆழமானது. சஞ்சீவ், நடிகர் விஜயுடன் மிகவும் நெருக்கமான 'வாடா போடா' நண்பர்கள். விஜய்யுடன் 'நிலாவே வா' உள்ளிட்டப் பலப் படங்களில் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
குடும்பப் பின்னணி
இவரின் அக்கா, நடிகை சிந்து, 'இணைந்த கைகள்' உள்ளிட்டப் பலப் படங்களிலும் மெட்டிஒலி சீரியல் உட்பட பல சீரியல்களிலும் நடித்தவர். ஆனால், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுச் சிறு வயதிலேயே அவர் இறந்து போனார். மேலும், தமிழ் சினிமாவின்ப் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மனைவியான மஞ்சுளாவின் சகோதரி மகன்தான் சஞ்சீவ் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இவ்வளவு பெரிய சினிமாப் பின்புலம் இருந்தும், இவரால் வெள்ளித்திரையில் சோபிக்க முடியவில்லை.
சின்னத்திரையின் சஞ்சீவ்
சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், சஞ்சீவ் சின்னத்திரை பக்கம் திரும்பினார். அங்கே அவர் ஒரு அசைக்க முடியாத நடிகராகவே மாறினார். 'திருமதி செல்வம்' சீரியல் இவரைச் சீரியல் ரசிகர்களிடம் அமோகமாகப் பிரபலப்படுத்தியது. அதன்பின் 'மெட்டி ஒலி', 'நம்பிக்கை', 'அண்ணாமலை', 'அவர்கள்', 'அகல்யா', 'மனைவி' உள்ளிட்டப் பல சீரியல்களிலும் 23 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார்.
நிறைவேறாத கனவின் வலி
கிட்டத்தட்ட 23 வருடங்களாகச் சீரியலில் நடித்து வந்தாலும், சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லை என்கிற கவலை இன்றும் சஞ்சீவிடம் ஆழமாக இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சஞ்சீவ், தனது இளம் வயதுக் கனவு பற்றி உருக்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்: "இப்போது சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால், இளம் வயசுல எனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்கலை. அதை நினைச்சு நிறையத் தடவை கண்ணாடி முன்னாடி நின்னு அழுதிருக்கேன்."
அம்மா, அப்பாவின் ஆசை
"நான் சினிமாவுல ஒரு பெரிய நடிகனா வருவேன்னு என் அம்மாவும் அப்பாவும் ஆசைப்பட்டாங்க. ஆனால், அது அவங்க சாகுற வரைக்கும் நடக்காமலே போயிடுச்சு. அவங்க ஆசையை நிறைவேற்ற முடியலைங்கிற வருத்தமும், கவலையும், வலியும் இப்பவும் எனக்கு இருக்கு" எனக் கண்ணீர் மல்கப் பேசியிருக்கிறார்.
சஞ்சீவ், 'நிலாவே வா' படத்தில் விஜய்யுடன் நடித்தப்போ, 'நீ நல்ல நடிகனா வருவே'ன்னு அவரோட அம்மா சொன்ன அந்த வார்த்தை, அவருக்குச் சினிமா கனவைப் பற்றிக்கொள்ள ஒரு நம்பிக்கையை அளித்தது. ஆனால், அந்த நம்பிக்கை நிஜமாகாமல் போனதுதான் இன்றும் அவரது மனதில் ஆறாதக் காயமாக இருக்கிறது. இத்தனை வருட போராட்டத்திற்குப் பிறகு, இப்போது சஞ்சீவுக்கு நல்ல சினிமா வாய்ப்புகள் வருவது, காலம்கடந்து அவருடையக் கனவு நனவாகப் போகிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"அன்னைக்கு காரி துப்பினவங்க... இப்போ போட்டோ எடுக்க வர்றாங்க!" முதலமைச்சருக்காக வருத்தப்பட்ட பெப்சி விஜயன் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
திமுகவில் ரூ.25 லட்சம் வரை லஞ்சம்.. விஜய் ஒரு பைசா வாங்கவில்லை! பூரித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா












Click it and Unblock the Notifications