தேவயானியால் சூட்டிங் ஸ்பாட்டில் கோபமான சரத்குமார்..அதுவும் "அந்த” திரைப்படத்திற்கு தானாம்
சென்னை: நடிகை தேவயானி மற்றும் சரத்குமார் பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்து அந்த படம் ஹிட்டாகி இருக்கிறது.
ஆனாலும் இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை குறித்து பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சில தகவல்களை கூறியிருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவராக இப்ப வரைக்கும் இருக்கும் தேவயானி ஆரம்ப காலகட்டத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டு தான் சினிமாவில் நுழைந்து இருக்கிறார். ஆனால் அந்த நடிப்பு அவருக்கே பிடிக்காமல் போக இனி இப்படி எல்லாம் ஆட மாட்டேன் என்று கூறி பிறகு தொட்டா சிணுங்கி திரைப்படத்தின் மூலமாக பிரபலம் அடைந்திருக்கிறார்.

தொட்டால் சிணுங்கி திரைப்படத்தில் நடிக்கும் போது கூட தேவயானி இனி நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி தான் நடிக்கவே ஒத்துக் கொண்டாராம். அதற்கு பிறகு தான் அவருக்கு காதல் கோட்டை, சூரிய வம்சம், ஃப்ரெண்ட்ஸ் போன்ற பல ஹிட்டான திரைப்பட வாய்ப்பு கிடைத்து இருந்தது.
நடிகர் சரத்குமாரோடு தேவயானி சூர்யவம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும், மூவேந்தர், ஒருவன், தென்காசி பட்டணம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களில் சரத்குமார் தேவயானி நடித்துக் கொண்டிருந்ததால் இவர்கள் இருவருக்கும் காதல் என்ற கிசுகிசுப்பும் அப்போது எழுந்தது.
அந்த நேரத்தில் தான் தேவயானியும் சரத்குமாரும் நடித்த ஒரு திரைப்படத்தில் சரத்குமார் பிரச்சனை செய்ததாக பிரபல மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது விக்ரமனின் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், விக்ரமன், தேவயானி இணைந்து நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார்.

அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்காக சரத்குமாருக்கும், விக்ரமுக்கும் முதல் ஷாட் என்பதால் காலையிலே வந்து உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் நேரமாகிக் கொண்டே இருந்ததாம். ஷாட்டுக்கு சரத்குமாரையும் விக்ரமையும் கூப்பிடவே இல்லையாம். ரொம்ப நேரம் கழிச்சு தான் தெரிஞ்சு இருக்கு நடிகை தேவயானி வைத்து ஒரு சின்ன காட்சியை இயக்குனர் எடுத்துக்கிட்டு இருக்காருன்னு. அதைப் பார்த்து சரத்குமார் மிகவும் காண்டாகி விட்டாராம்.
அதனால சரத்குமார் நேரா இயக்குனரிடம், காலையிலிருந்து உட்கார்ந்திட்டு இருக்கோம். ஒரு ஷாட் கூட எடுக்காமல் தேவயானியை வைத்து ஒரு சாதாரண காட்சியை இவ்வளவு நேரமா எடுத்துட்டு இருக்கீங்க? என்று தொடங்கிய பிரச்சனை அடிதடி வரைக்கும் வந்துவிட்டதாம்.அந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்ததால் அவங்க தான் அந்த பிரச்சனையை தீர்த்து படத்தை மீண்டும் தொடங்கி முடித்து வைத்தார்களாம்.












Click it and Unblock the Notifications