சொந்த ஊரில் கெத்து காட்டிய சரத்குமார்.. சூழ்ந்த உறவினர்கள்.. சிறப்பான மரியாதை.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் சரத்குமார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு அவருடைய மனைவியான ராதிகாவோடு சென்று இருக்கிறார். அப்போது பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் சரத்குமார் 80ஸ் காலகட்டத்தின் இறுதியில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இப்போதுள்ள 2k கிட்ஸ்களுக்கு கூட பரிட்சயமானவர்தான். சினிமா நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் பிரபலமடைந்திருக்கிறார். அதோடு ராடான் நிறுவனத்தை நடத்தி வரும் சரத்குமார் தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக பலருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அதுபோல நடிகை சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் சரத்குமாருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். பிறகு சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகனும் இருக்கிறார்.
சமீபத்தில் தான் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமிக்கு திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது ராதிகா தான் வரலட்சுமியின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். அதே நேரத்தில் சரத்குமார் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக அடிக்கடி அவுட்டிங் செல்வது, குடும்பத்தோடு பண்டிகைகளை கொண்டாடுவது என்று மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட பொங்கல் நாளில் சரத்குமார் வெளியிட்ட ரீல்ஸ் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது. அதாவது சரத்குமார் மற்றும் ராதிகா ஜோடியாக சில வருடங்களுக்கு முன்பு நடித்த சூரியவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்திற்கு பலரும் ரீல்ஸ் செய்து பார்த்திருப்போம். ஆனால் இப்போது சரத்குமார் தன்னுடைய மருமகனை வைத்து அதே ரீல்ஸ் செய்திருந்தார்.
சரத்குமார் குடும்பத்தோடு குரூப் போட்டா எடுக்கும் போது என் குடும்பத்துல எல்லாரும் வந்தாச்சு என்று சொல்ல, அதற்கு ராதிகா சின்ராசு.. என்று இழுக்கும்போது வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் அழுவது போன்று ரியாக்ஷன் செய்த வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் இன்று சரத்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களோடு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் தமிழரின் பாரம்பரிய விழா பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்றைய தினம் எனது சொந்த ஊரான தலக்காவூர் பிள்ளையார் கோவில் மற்றும் சுறா வயலில் அமைந்துள்ள குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அனைவர் நலம் வேண்டி பிரார்த்தித்தோம்.

பின்னர் சிறாவையில் அம்பலத்தாரர் இல்லத்திற்கு சென்றதில் அங்கு மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்வு துவங்கியதற்கு மாட்டிற்கு மரியாதை செய்து வாடிவாசலை பார்வையிட்டு பின்னர் விருதுநகர் சென்றோம். மதுரை மண்டலத்திற்குட்பட்ட சொந்தங்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications