2 மணிக்கு பொண்டாட்டி கிட்ட கருத்து கேட்டது தப்பா? சரத்குமார் கேள்வி! கே.எஸ் ரவிக்குமார் கவுண்ட்டர்
சென்னை: நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது அதில் நான் அரசியல் முடிவை இரண்டு மணிக்கு என்னுடைய மனைவியிடம் கேட்டு எடுத்தது தப்பா? அது பற்றி சிலர் இணையத்தில் தவறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்து கே எஸ் ரவிக்குமார் யாரும் எதிர்பார்க்காத கவுண்ட்டர் கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
நடிகர் சரத்குமார் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியின் தலைவராக இருந்த சரத்குமார் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியோடு தன்னுடைய கட்சியை இணைத்து கொண்டார்.

இது அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் சில ரசிகர்கள் சரத்குமாரின் முடிவை ஏற்றுக் கொண்டனர். ஒரு சிலர் இந்த முடிவை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சரத்குமார் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது இதுபற்றி தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.
அதில் சரத்குமார் பேசுகையில் நான் என்னுடைய முடிவை என்னுடைய மனைவியிடம் பேசி எடுத்தது தப்பு என்று சிலர் சொல்கிறார்கள். சமீபத்தில் கூட நான் அரசியல் முடிவை என்னுடைய மனைவியிடம் கேட்டு எடுத்தேன் என்று இணையத்தில் சிலர் கேலி செய்து வருகிறார்கள். ஆனால் நான் சம்பந்தப்பட்ட அன்று இரவு தூக்கம் வராமல் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய மனதிற்குள் சில குழப்பங்கள் இருந்து கொண்டே இருந்தது.
நான் அரசியல் ரீதியாக என்னுடைய கட்சி விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்தேன். அந்த நேரத்தில் என் பக்கத்தில் இருந்த என் மனைவியிடம் அதைப் பற்றி பேசினேன். உடனே அவரும் நீங்க எடுத்த முடிவு சரிதான் என்று சொல்ல, நான் என்னுடைய முடிவை உறுதியாக அறிவித்து விட்டேன். ஆனால் இதை சிலர் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் என்னுடைய மனைவியிடம் தானே கேட்டு முடிவெடுத்தேன்? பல பேர் வேணும்னா கேர்ள் பிரண்டோட இருக்கலாம்... நான் வைஃபோட இருக்கிறேன்... அதனால ஒய்ஃப் கிட்ட தானே நான் கேட்க முடியும்? என்று சொல்ல, அந்த பேட்டியில் அவரோடு கலந்து கொண்ட கே எஸ் ரவிக்குமார் டக்கென்று "எந்த வயசு ஆனாலும் உங்க ஆசை மாறவே இல்ல சார்" என்று சொல்ல ஒரு நிமிடம் சரத்குமார் திகைத்து போய் பிறகு சிரிக்கிறார்.
அதற்கு கே எஸ் ரவிக்குமார் சரத்குமார் உடைய மனம் எப்போதும் மாறவே செய்யாது என்று மீண்டும் சொல்ல சரத்குமார் சிரித்துக் கொண்டே என்னை பொறுத்த வரைக்கும் இவர் மட்டுமல்ல இணையத்தில் இன்னொருத்தரை கிண்டல் பண்றதை சிலர் சந்தோஷமா நினைச்சுட்டு இருக்காங்க. நானும் அவங்க சந்தோஷமா இருக்கட்டுமேன்னு அதை கண்டுக்கிறது இல்ல.. விட்டுட்டேன், என்று அந்த பேட்டியில் சரத்குமார் கூறியிருக்கிறார்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications