வீட்டுல விசேஷம்ங்க.. வரலட்சுமி போட்ட போஸ்ட்.. முதல் ஆளாக சரத்குமார் போட்ட கமெண்ட்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு கணவர் குறித்து பெருமையாக ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களின் வாரிசுகள் ஒரு சிலர் மட்டும்தான் அவர்களைப் போலவே சினிமாவில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் ஒருவர்.

சரத்குமார் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். ஆனாலும் இவருக்கு வயதே ஆகாதா என்பதுதான் இவரை பார்க்கும் பலருடைய கேள்வியாக இருக்கும். அதற்கு கூட சரத்குமார் சில இடங்களில் நீங்கள் என்னை சிஎம் ஆக்கினால் நான் உங்களுக்கு வயதே ஆகாமல் இருப்பது எப்படி என்ற அறிவுரையை இலவசமாக தருவேன் என்று பேட்டி கொடுத்திருந்தார்.
இது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல சரத்குமார் சாயா என்பவரை திருமணம் செய்து இருந்த நிலையில் அவருக்கு வரலட்சுமி, பூஜா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் வரலட்சுமி சினிமாவில் நடிக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியால் போடா போடி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

சரத்குமார் சாயாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய அப்பா ராதிகாவை திருமணம் செய்து கொண்ட போது ஆரம்பத்தில் வரலட்சுமி ராதிகாவோடு பேசாமல் இருந்தார், ஆனால் இப்போது ராதிகாவின் குடும்பமும் சாயாவின் குடும்பமும் அடிக்கடி பங்க்ஷனில் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள்.
அதுபோல வரலட்சுமிக்கு கடந்த ஜூன் மாதத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அவருடைய திருமண செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சி ஆக்கி இருந்தது. அதுவரைக்கும் வரலட்சுமி காதலிக்கும் விஷயம் பெரிய அளவில் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் அவருக்கும் நிக்கோலாய் என்பவருக்கும் எங்கேஜ்மென்ட் புகைப்படங்கள் வெளியானது தான் பெரிய அளவில் பேசப்பட்டது.

பிறகு திருமணம் தாய்லாந்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சென்னையில் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு வரலட்சுமி தன்னுடைய கணவரோடு அதிகமான வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தன்னுடைய திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி இருக்கிறார். அதோடு அந்த பதிவிற்கு என் ஒருவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இந்த வருடத்தில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து இருக்கிறது.. எல்லாம் மிக வேகமாக நடந்து முடிந்து விட்டதால் இப்போது திரும்பிப் பார்க்கும்போது இது போன்ற அற்புதமான நினைவுகளை உருவாக்கினோம்.

நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று சொல்ல ஒன்றரை நிமிடம் போதாது. நீங்கள் நீங்களாக இருப்பதற்கு நன்றி. நீங்கள் உங்களை நேசிப்பதை விட என்னை அதிகமாக நேசிக்கிறீர்கள். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு இடத்திலும் உங்களுடைய கடுமையான அன்பு, விசுவாசமும் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எப்படி ஒரு உண்மையான உத்வேகமான ஆணாக இருக்க வேண்டும்.. உங்களை சுற்றி உள்ள பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையே பார்க்க ஒவ்வொருத்தருக்கும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் என்னை பாதுகாக்கிறீர்கள். என்னை ஒரு நொடி கூட விலக விடாமல் செய்கிறீர்கள். உங்களைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.

நான் சொல்லக்கூடியது, நான் தான் உங்களைப் போன்ற ஒரு கணவரை பெற்றதற்கு உயிருடன் இருக்கும் வரை அதிர்ஷ்டசாலியான பெண். இதற்கு மேல் நான் எதுவும் கேட்க முடியாது. என் உலகத்தை சுழல செய். உன்னை சந்தித்த அன்று எனக்கு என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவிற்கு நான் உங்களை காதலிக்கிறேன்... என்று தன்னுடைய கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தன்னுடைய காதலையும் தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு சரத்குமார் "எப்போதும் இது போலவே மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியத்துடனும் இருவரும் இருக்க வேண்டும்" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுபோல ராதிகாவின் மகளான ராயல் மிதுன் நிக்கோலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதோடு பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications