Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாலி கட்டாம வேற பெண்ணோடு குடும்பம் நடத்துறேனா.. முதல் மனைவி செத்துட்டா.. கொந்தளித்த சித்தப்பு சரவணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் தாலி கட்டாமல் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக முதல் மனைவி சூர்யா ஸ்ரீ என் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சரவணன் 1990 களில் வைதேகி வந்தாச்சு, பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, பார்வதி என்னை பாரடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு தாயுமானவன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை.

Actor Saravanan denies the allegations of his first wife

இதையடுத்து 2007 ஆம் ஆண்டு இயக்குநர் அமீரின் பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தார். சரவணன் சூர்யா ஸ்ரீ என்பவரை 1996 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து அவருக்கு குழந்தை இல்லை என்பதால் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒருமகன் இருக்கிறார். இந்த மகன் நினைவாக இருப்பது குறித்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தெரிவித்திருந்தார். மேலும் தான் பெண்களை உரசுவதற்காகவே பேருந்துகளில் பயணிப்பேன் என தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் சரவணன் 2013 ஆம் ஆண்டு சென்னை குன்றத்தூரில் இரு அபார்ட்மென்ட்களை வாங்கியிருந்தார். அதில் ஒரு அபார்ட்மென்டில் முதல் மனைவியையும் இன்னொரு அபார்ட்மென்டில் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் அண்மையில் அமைச்சர் தாமோ அன்பரசனை சந்தித்து ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் தான் வாங்கிய இரு அபார்ட்மென்ட்களின் கார் பார்க்கிங் மற்றும் யூடிஎஸ் பகுதிகளில் புரோக்கர் ராமமூர்த்தி என்பவர் கதை கட்டிவிட்டதாகவும் அதற்கு மின் இணைப்பு வாங்கி, வரியும் கட்டிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராமமூர்த்தியும் அவரது மனைவியும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சரவணனின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ, கணவர் குற்றம்சாட்டிய ராமமூர்த்தி, அவரது மனைவி ஜெயமணியுடன் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில் சூர்யா ஸ்ரீ கூறுகையில் பருத்தி வீரன் படத்திற்கு பிறகு வருமானம் இல்லாமல் இருந்தார். நான் தான் அவருக்கு தேவையானதை செய்தேன்.

மேலும் குன்றத்தூரில் வாங்கியதாக கூறும் வீடுகள் இரண்டுமே நான் செலவு செய்து வாங்கியது. நான் செய்த ஒரு தவறு அவர் பெயரில் வாங்கியதுதான். ஆனால் இன்று வேறு ஒரு பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார். என்னிடம் விவாகரத்து பெறாமல் அவர் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும். எனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அவர்தான் பொறுப்பு. அடியாட்களுடன் வந்து சரவணன் என்னை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டுகிறார். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

சூர்யா ஸ்ரீயின் பேட்டிகளை பார்த்த சரவணன், முதல் மனைவி சம்மதித்துதான் நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நான் யாரையோ தாலி கட்டாமல் குடும்பம் நடத்துவதாக பழி போடுகிறார். இதனால் அவரை என்னால் முதல் மனைவி என்று கூட சொல்ல முடியவில்லை. என்னை பொருத்தமட்டில் முதல் மனைவி செத்துட்டதாகவே நான் எண்ணுகிறேன். இந்த விஷயத்தில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும். அப்போது செய்தியாளர்களை சந்திப்பேன் என சரவணன் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+