ரஜினி சொன்ன வார்த்தை அப்படியே பலித்துவிட்டது! ஆனால், வாழ்க்கையில் நடந்த சோகம்! சரவணன் உருக்கம்
சென்னை: 90ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலம் அடைந்த நடிகர் சரவணன் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை தன்னுடைய வாழ்க்கையில் நடந்துவிட்டது என்று பேட்டியில் பேசியிருக்கிறார்.
நடிகர் சரவணன் 1991-ஆம் ஆண்டு வெளியான 'வைதேகி வந்தாச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக, 'பருத்திவீரன்' திரைப்படத்தில் அவர் ஏற்ற "சித்தப்பு" கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சரவணன் பேட்டி
சமீபத்தில் நடிகர் சரவணன் இண்டியா கிளிட்ஸுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'பருத்திவீரன்' திரைப்படம் வெளியான பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்டு பேசிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்தத் திரைப்படத்தில் சரவணன் "சித்தப்பு" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு, ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியுள்ளார்.
ரஜினி சொன்ன வார்த்தை
அந்தச் சம்பவத்தை விவரிக்கும்போது சரவணன், ரஜினிகாந்த் தன்னிடம், '16 வயதினிலே' படத்தில் 'பரட்டை' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால், அந்தப் பெயரிலிருந்து வெளியே வருவதற்கு நான் ரொம்ப நாள் கஷ்டப்பட்டேன். ஆனால், 'பருத்திவீரன்' படத்தில் நீங்க 'சித்தப்பு' என்ற கேரக்டரில் வாழ்ந்திருக்கீங்க. இனி உங்களால் இந்த கதாபாத்திரத்தின் பெயரை மாற்றவே முடியாது. ஏன்னா, பரட்டையை விட சித்தப்பா என்பது ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கக் கூடிய ஒரு உறவு. எனவே வாழ்க்கையில் இந்த சித்தப்புங்கிற பேரை உங்களால் மாத்தவே முடியாது" என்று கூறியதாகத் தெரிவித்தார்.
அப்படியே நடந்தது
'பருத்திவீரன்' வெளியாகி 17 வருடங்கள் ஆன பிறகும், மக்கள் தன்னை "சித்தப்பு, சித்தப்பு, சித்தப்பு" என்றுதான் அழைக்கிறார்கள் என்றும், தான் ராயன், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்த பிறகும் அந்தப் பெயர் மாறவில்லை என்றும் சரவணன் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். "அது தலைவர் சொன்ன வாக்கு, அது வேத வாக்கு" என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
'பருத்திவீரன்' படத்தில் சரவணன் ஏற்று நடித்த 'சித்தப்பு' கதாபாத்திரம், அவருக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுடன் ஒரு நேரடித் தொடர்பையும் ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் பாராட்டு, அந்தக் கதாபாத்திரத்தின் தாக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
வருத்தம்
ஆனாலும் பரத்தி வீரன் திரைப்படம் தனக்கு பெயரை புகழை வாங்கி தந்தாலும் தன்னுடைய வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக எனக்கு பெரிய அளவில் சம்பளமும் கிடைக்கவில்லை அந்த திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பெரிதாக வாய்ப்பும் வரவில்லை அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து நான் போராடி தான் இப்போது ஒரு சில வாய்ப்புகள் எனக்கு வந்து கொண்டிருக்கிறது என்று சரவணன் வருத்தமாகவும் சில பேட்டிகளில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications