காதல் கோட்டை படம் எனக்காக உருவானது.. இதனால் தான் அஜித்துக்கு போனது! நடிகர் சரவணன் ஓபன்
சென்னை: இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சரவணன் என்று சமீபத்தில் அவர் ஃபிலிமி பீட் தமிழில் பேசி இருக்கிறார். அதோடு அந்த திரைப்படத்தின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் சரவணன் பேசியிருக்கிறார்.
ஒரு சில திரைப்படங்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் வாழ்க்கையே மாற்றிவிடும். அதுபோலத்தான் நடிகை தேவயானியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் என்றால் அது காதல் கோட்டை திரைப்படம் தான். அதற்கு முன்பு தேவயானி நடித்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்று தேவயானி முடிவெடுத்து இருந்த நேரத்தில் அவருக்கு காதல் கோட்டை திரைப்படம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அஜித் நடித்த திரைப்படம்
காதல் கோட்டை திரைப்படம் மூலமாக பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். அந்த திரைப்படத்திலிருந்து இப்ப வரைக்கும் தொடர்ந்து தேவயானி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல அந்த திரைப்படம் அஜித் குமார் உடைய வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தில் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே கடிதம் மூலம் காதல் கொள்வார்கள்.
காதல் கோட்டை திரைப்பட அனுபவம்
கடைசி கிளைமேக்ஸ்ல் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். இந்த திரைப்படம் 90ஸ் ஹிட்ஸ் களின் பேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை அகத்தியன் வாங்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் அஜித் மற்றும் தேவயானியை தொடர்ந்து தலைவாசல் விஜய், ஹீரா, கரண் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்கள்.
தேவாவின் பாடல்கள்
தேவாவின் இசையில் பலருடைய மனதை கவர்ந்த பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகர் சரவணன் பேசியிருந்தார். அப்போது அவரிடம் நீங்கள் மிஸ் பண்ணிய படங்கள் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்க, பல படங்களை நான் மிஸ் பண்ணி இருக்கிறேன் காதல் கோட்டை படம் கூட எனக்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த திரைப்படத்தின் இயக்குநர் அகத்தியன் பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை சொன்னார். ஆனால் யாருக்கும் நம்பிக்கை வரவில்லை.
காதல் கோட்டை கதை
கதாநாயகனும் கதாநாயகியும் படம் முழுக்க சந்திக்காமலேயே இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரிடம் கூட அகத்தியன் கதை சொன்னார். அவர் சில மாதங்கள் காத்திருக்க சொன்னார் ஆனால் உடனே சூட்டிங் துவங்க வேண்டிய சூழ்நிலை என்பதால் விஜய் அதில் நடிக்கவில்லை. நான் அகத்தியனை கூட்டிக்கொண்டு சில தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வைத்தேன்.
நடிகர் சரவணன் பேட்டி
அந்த படத்தில் நிறைய ரயில் காட்சி இருந்ததால் அதை மாற்றி பஸ்ஸில் வைக்கலாம் என்று சொன்னார்கள். அந்த நேரத்தில் ரயில் காட்சி எடுக்க வேண்டும் என்றால் அப்போதே ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். அந்த பணம் உடனே திரும்பி வராது. சில வருடங்கள் கழித்து தான் திரும்பி வரும். அதனால் இந்த காட்சி எடுப்பதற்கு எல்லோரும் யோசித்தார்கள். ஒரு முறை அவர் கதையை கேட்டு ஒரு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்று சரவணன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
இயக்குநரின் திறமை
காதல் கோட்டை படத்திற்கு முன்பு அஜித்தை வைத்து அகத்தியன் வான்மதி படத்தை இயக்கியிருக்கிறார் அகத்தியன். அந்த படத்தை தயாரித்தது சிவசக்தி பாண்டியன் என்கிற தயாரிப்பாளர் தான். காதல் கோட்டை படத்தை எடுப்பதற்கு எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை என்பதால் சிவசக்தி பாண்டியனிடம் பேசி அஜித்தை வைத்தே இந்த படத்தை அகத்தியன் இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications