சசிகுமாருக்கு வந்த சோதனை! மதுரையில் திடீரென சூட்டிங்கை நிறுத்திய போலீஸ்! காரணம் இதுதானா?
சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுத்தது. சமீப காலமாகவே அவர் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் வெப் சீரிஸின் ஷூட்டிங் மதுரையில் நடந்த போது திடீரென்று போலீஸ் நிறுத்தி இருக்கிறார்கள். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில திரைப்பட நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு பெற்று வருகிறது. கதை அம்சம் உள்ள திரைப்படங்களில் பார்த்து பார்த்து சில நடிகர்கள் நடித்து வருகிறார்கள். சிலர் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகர் சசிகுமார் சமீப காலமாக கதை தேர்வில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

சசிகுமார் திரைப்படங்கள்
நடிகராக வேண்டும் என்ற கனவோடு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த சசிகுமாருக்கு ஆரம்பத்தில் இயக்குனராகத்தான் வாய்ப்பு கிடைத்தது. உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கி, இயக்குனராகவும் மாறி இருந்தார். அதற்கு பிறகு தன்னுடைய திரைப்படத்தில் தானே கதாநாயகனாகவும் நடித்து வந்தார். அவருடைய கிராமப்புற கேரக்டர் மக்கள் மனதில் பதிந்து விட்டது. சுப்பிரமணியபுரம் நாடோடிகள் திரைப்படங்களுக்கு பிறகு சசிகுமார் நடித்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் மக்களை கவரவில்லை.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி
அதற்கு காரணம் அவர் தன்னுடைய கடன் காரணமாக வந்த வாய்ப்புகள் எல்லாம் ஓகே சொன்னது தான் என்று ஒரு இன்டர்வியூவில் சசிகுமார் சொல்லி இருந்தார். ஆனால் இனி நான் தேர்ந்தெடுக்கும் படங்கள் நல்ல கதை அம்சம் உள்ளதை தான் எடுப்பேன் என்று சொல்லி இருந்தார். அதேபோல இப்போது சில வருடங்களாக சசிகுமார் தேர்வு செய்யும் கதை மக்கள் மனதை தொடுகிறது.

சசிகுமார் வெப் சீரிஸ்
அதிலும் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் கிட் அடித்து விட்டது. இப்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் வெப் சீரிஸ் ஷூட்டிங் நேற்று மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் நடைபெற்றிருக்கிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பொதுவாக அதிகமான வாகனங்கள் வந்து போகும். அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
சூட்டிங் நிறுத்தம்
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் சசிகுமார் நடிக்கும் புதிய வெப் சீரிஸ் இன் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது சென்னை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் சூட்டிங் உபகரணங்களை வைத்திருக்கிறார்கள். இதனால் அங்கிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த போலீஸ் சூட்டிங்கை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. காரணம் சூட்டிங்க்கு முறையான அனுமதி வாங்கவில்லையாம். பிறகு பட குழுவினர்கள் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள். அதற்கு பிறகு சூட்டிங் தொடங்கி இருக்கிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications