சூப்பர் சிங்கரில் மாகாபா பிரியங்காவை ஓபனாக தாக்கி பேசிய சசிகுமார்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் நடிகர் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். அப்போது மாகாபா மற்றும் பிரியங்கா பற்றி சசிகுமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா மற்றும் மாகாபாவை நிகழ்ச்சியில் ஓபனாக சசிகுமார் தாக்கி பேசியிருக்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
விஜய் டிவி நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள். ஆனால் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கடந்த வாரத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சசிகுமார் தான் பல வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருவதாக கூறியிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் சக்சஸ்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் இப்போது ஜூனியர்களுக்கான பத்தாவது சீசன் நடந்தபட்டு வருகிறது. இதில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராகத்தான் நடிகர் சசிகுமார் கலந்து கொண்டிருக்கிறார். சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சசிகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சசிகுமார் வருத்தம்
அப்போது பிரியங்கா தன்னை போல சிரிப்பதாக சொல்லி ஏதோ ஒரு சிரிப்பை சிரித்துக் கொண்டிருக்கிறார் அவரால் நான் வெளியே போகும் இடங்களெல்லாம் என்னிடம் அதே போல சிரிக்க சொல்லி ரசிகர்கள் கேட்கிறார்கள் என்று பிரியங்கா தலையில் சசிகுமார் ஓங்கி குட்டு வைத்திருந்தார். அதைத்தெடர்ந்து சசிகுமார் அங்கிருந்த பாடகர் ஒருவரிடம் பேசும் போது நீங்க எவ்வளவு அழகாக பாடுகிறீர்கள்? ஆனால் தயவுசெய்து இந்த ராமருக்கு எல்லாம் வாய்ஸ் ஓவர் கொடுக்காதீங்க. உங்களுடைய திறமை வெளியே வரணும் என்று பாராட்டி பேசி இருந்தார்.
சசிகுமார் சொன்ன வார்த்தை
அப்போது பிரியங்கா சார் நீங்க உண்மையிலேயே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாக்கறீங்களா என்று கேட்க, நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே நான் ஒவ்வொரு வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பேன். பல சீசன்களாக தொடர்ந்து பார்த்துட்டு வரேன் ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்த பலர் மாறி போய்ட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இன்னும் இருந்துட்டு இருக்கீங்க அதுக்காக வாழ்த்துக்கள் என்று சொல்லி இருந்தார்.
சசிகுமாரின் திறமை
இதை இணையத்தில் பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள். மாகாபா மற்றும் பிரியங்கா மட்டும் எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு பல வருடங்களாக இதே நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று சசிகுமார் கூறிவிட்டார், என்று பிரியங்கா மாகாபாவை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சசிகுமார் கிட்டார் வாசித்து அனைவரையும் வியக்க வைத்தார். அது தனக்கு சொல்லிக் கொடுத்தது இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தான், அவர்தான் ஒரு நிகழ்ச்சியில் என்னை கிட்டார் வாசிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார் அதற்கு பிறகு எப்படி வசிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தார் என்று கூறியிருந்தார்.
உங்க கருத்து
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் பைனலுக்கு போவதற்காக போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டில் பல போட்டியாளர்கள் தங்களுடைய திறமையை காட்டிக்கொண்டிருக்கிறார்கள் இதில் எந்த பாடகர் டைட்டில் வெற்றி பெற்றால் சரியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீங்க பாஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications