பாக்கியலட்சுமி சீரியலிருந்து விஜே விஷால் விலக காரணம்? வெளிப்படையாக பேசிய கோபி.. இதுதான் விஷயமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வந்த விஜே விஷால் நேற்றைய எபிசோடில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் நடித்து வந்த நடிகர் நவீன் எழிலாக நடிக்கிறார். இந்த நிலையில் எதற்காக விஜே விஷால் விலகினார் என்பது பற்றி இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்ப வரைக்கும் தொடர்ச்சியாக இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இரண்டு இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் பல நடிகர்கள் இவருக்கு பதில் இவர் என்று மாறிக்கொண்டிருந்தாலும் எழில் கேரக்டரில் ஆரம்பத்தில் இருந்தே விஜே விஷால்தான் நடித்து வந்தார். விஜே விஷால் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான "ரெடி ஸ்டடி போ" என்ற நிகழ்ச்சியை மாகாபாவோடு சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார்.
அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் விஜே விஷால் ஒரு சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இவர் விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவருக்கு பதிலாக புது நடிகர் வந்திருக்கும் நிலையில் இது குறித்த கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக கேட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஷால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் "சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை... நான் முடிவுகளை எடுக்கிறேன் பிறகு தான் அவற்றை சரி செய்வேன்" என்று கேப்ஷன் கொடுத்திருந்தார்.
இதற்கு பலரும் நீங்கள் எடுத்த முடிவு சரிதான் பாக்கியலட்சுமி சீரியலில் இப்போது உங்களுடைய கேரக்டர் பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்று கருத்து கூறி விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். அதோடு விஷாலின் அடுத்த பரிமாணத்தை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருப்பதாகவும் பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் எழிலின் தந்தையாக கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் நேற்று நீங்கள் எல்லாரும் பார்த்திருப்பீங்க இதுவரைக்கும் எழிலாக நடித்து வந்த விஷால் விலகி இருக்கிறார். புதியதாக அவர் கேரக்டரில் இன்னொரு நடிகர் வந்து இருக்கிறார். அவருக்கு என்னுடைய ஆசிகளும், வாழ்த்துக்களும். அவரும் நன்றாக நடிக்கிறார். அதுபோல விஷால் எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என்று எல்லோரும் கேட்கிறீர்கள். அது உண்மையில் எனக்கும் தெரியவில்லை.
அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால் சிறகு முளைத்து இங்கிருந்து பறந்து போக வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு நான் தந்தையாக என்ன சொல்ல வேண்டும் பத்திரமா பார்த்து வானத்தில் பறக்க வேண்டும் என்றுதான் சொல்லி அனுப்ப முடியும். அதைத்தான் அவருக்கு சொல்லி இருக்கிறேன். அவர் எங்கே போனாலும் நல்லபடியாக இருக்க வேண்டும். நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

அதுபோல நீங்களும் அவருடைய ஃபியூச்சர் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று உங்களுடைய ஆசீர்வாதத்தை கொடுங்கள் என்று கோபி அதில் பேசியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் அப்போ விஷால் பாக்கியலட்சுமி டீமோடு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு வேற நிகழ்ச்சிக்கு போய்விட்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இனி விஷால் விஜய் டிவியில் வேற நிகழ்ச்சிகளில் வரப்போகிறாரா? இல்லையா? என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.
விஷால் திடீரென்று விலகியது குறித்து உங்களுடைய கருத்து என்ன? ஏற்கனவே எழிலாக நடித்து வந்த விஷால் உடைய நடிப்பு உங்களுக்கு பிடித்திருந்ததா? அல்லது எழிலாக அறிமுகமாகி இருக்கும் நடிகர் நவீன் நடிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என்ற உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications