10 ரூபாய் ஆசையை காட்டி.. செந்தில் வாழ்க்கையே மாற்றிய நடிகர் கவுண்டமணி!?.. வெளியான பல வருட ரகசியம்
சென்னை: திரைத்துறையில் நடிகர் கவுண்டமணி செந்தில் காமெடிக்கு இணை யாருமே இல்லை என்று சொல்ற மாதிரி தான் இப்ப வரைக்கும் இவர்கள் இருவருடைய காமெடி மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த கதாநாயகர்கள் ஏராளம் என்று சொல்லலாம்.
ஆனால் நடிகர் கவுண்டமணியால் தான் செந்தில் உடைய வாழ்க்கையே மாறி இருக்கிறது. துணி கடையில் ஏழு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் செந்திலின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக கவுண்டமணி செய்த செயலால் முற்றிலுமாக மாறி இருக்கிறது. துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த செந்தில் எப்படி ஒரு நடிகராக மாறினார் என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாய்ப்பு எப்போ எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போய்விடலாம் என்று பலர் சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அதுபோல்தான் நடிகர் செந்தில் உடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது. செந்தில் மற்றும் கவுண்டமணி காமெடி இப்ப வரைக்கும் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
இவர்கள் இருவர் நடிப்பிலும் வெளியான காமெடிகள் எத்தனை முறை பார்த்திருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்து விடும் அந்த மாதிரி பல காமெடிகளை சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் நடிகர் செந்தில் முதல் முறையாக எப்படி சினிமாவுக்கு வந்தார் என்பது பற்றிய ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது செந்திலை சினிமாவில் அறிமுகம் செய்தது கவுண்டமணி தானாம்.
இவர்கள் இருவரும் நடிப்பில் வெளியான காமெடிகள் எத்தனை முறை பார்த்திருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் ரசிகர்களை சிரிக்க வைத்து விடும் அந்த மாதிரி பல காமெடிகளை சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் நடிகர் செந்தில் முதல் முறையாக எப்படி சினிமாவுக்கு வந்தார் என்பது பற்றிய ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது செந்திலை சினிமாவில் அறிமுகம் செய்தது கவுண்டமணி தானாம்.
இருவரும் சினிமாவில் வரும்போது ஒரு துணி கடையில் தான் தனித்தனியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் செந்திலை கவுண்டமணி எப்பவாவது தான் பார்த்ததுண்டாம். ஆனால் பெரிய அளவில் இருவருக்கும் பழக்கம் கிடையாதாம். பிறகு அந்த நேரத்தில் தியேட்டரில் ஸ்கிரீன் கட்டி நாடகங்கள் போடுவார்களாம்.
அந்த நேரத்தில் கவுண்டமணி தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்திருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாடகம் நடிக்கப் போவாராம். அப்போ ஒரு முறை நாடகம் நடிக்க போன இடத்தில் அங்கிருந்து முதலாளி ஸ்கிரீன் பிடிக்க யாராவது இருந்தால் வரச்சொல் என்று கவுண்டமணி இடம் சொல்லி இருக்கிறார். உடனே கவுண்டமணியின் மனதில் செந்தில் முகம் வந்திருக்கிறது.
சரி அவரிடம் பேசிப் பார்ப்போம் என்று செந்தில் வேலை பார்க்கும் கடைக்கு போய் அவரிடம் ஸ்கிரீன் பிடிக்கிற வேலைக்கு வரியா என்று கேட்க அதற்கு செந்தில் இல்லை எனக்கு இங்க ஏழு ரூபாய் சம்பளம் தராங்க என்னால வர முடியாது என்று சொல்ல அதற்கு கவுண்டமணி உனக்கு நான் பத்து ரூபா வாங்கி தரேன் வா என்று சொல்லி முதலாளி இடமும் அனுமதியும் வாங்கி தியேட்டருக்கு கூட்டிட்டு போய் இருக்கிறார்.

அப்போ அங்கு நாடகம் நடக்கும்போதெல்லாம் ஸ்கிரீன் பிடிக்கிற வேலையை செந்தில் பார்த்துக் கொண்டிருப்பாராம். ஒரு நாள் நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது போலீஸ்காரராக நடிப்பவர் அங்கு வரலையாம். அப்போ என்ன செய்வது என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது ஸ்கிரீன் பிடித்துக் கொண்டிருந்த செந்திலை நடிக்கவைக்கலாம் என்று கவுண்டமணி ஐடியா கொடுத்து போலீஸாக நடிக்க சொல்லி இருக்கிறார்கள். செந்திலும் அன்று அருமையாக நடித்திருக்கிறார். அன்னையிலிருந்து இவர்கள் இருவருடைய நடிப்பு தொடங்கி வெள்ளி திரையிலும் கொடி கட்டி பறந்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications