மகாராஜா படத்தில் நடிக்காத காரணம்! வெளிப்படையாக சாந்தனு பதிவு.. 10 வருடம் முன்பே இப்படி நடந்ததா?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற மகாராஜா திரைப்படத்தில் முதலில் நடிகர் சாந்தனு தான் நடிக்க இருந்தார், ஆனால் பிறகு அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று அந்த திரைப்பட இயக்குனர் சொல்லி இருந்த நிலையில் தான் எதற்காக அந்த படத்தில் நடிக்கவில்லை என்பது பற்றி நடிகர் சாந்தனு திடீர் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
பொதுவாக திரைத்துறையில் பல நடிகை, நடிகர்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாரிசுகள் அவர்கள் போல வெற்றி பெற முடியவில்லை. என்ன தான் திறமையும் அதற்கு ஏற்ற உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வெற்றிகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகர் சாந்தனு.

நடிகர் பாக்கியராஜின் ஒரே மகனான சாந்தனு பாக்கியராஜ் இயக்கிய சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் தன்னுடைய அப்பா போலவே சினிமாவில் பெரிய அளவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருக்கிறது.
பல ஹிட் படங்களில் ஏதாவது ஒரு காரணத்தால் சாந்தனு நடிக்க முடியாமல் போய்விட பிறகு வேறு ஒரு நடிகர்கள் நடித்த அந்த படம் பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சுப்பிரமணியபுரம் படத்தை சொல்லலாம். அந்த படத்தில் முதலில் சாந்தனு நடிப்பதற்காக கேட்டபோது அந்த படத்தின் கதையை கேட்டு பாக்கியராஜ் இது சாந்தனுவிற்கு சரியாக இருக்காது என்று மறுத்துவிட்டதாகவும் பிறகுதான் நடிகர் ஜெய் நடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தின் கதை 10 வருடங்களுக்கு முன்பே நடிகர் சாந்தனுவிடம் இயக்குனர் நித்திலன் சொல்லி இருந்தேன் என்று சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார். நான் இந்த படத்தில் சாந்தனுவை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் சில காரணங்களால் அப்போது படத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது என்று அவர் பேசி இருந்த நிலையில் இதுகுறித்து நடிகர் சாந்தனு தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் மகாராஜா போல ஒரு சிறந்த படத்தை கொடுத்ததற்கு இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி. நான் முதலில் இந்த கதையை தேர்வு செய்தேன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தை நான் மிஸ் செய்வதற்கு காரணம் என்னுடைய அப்பாவோ, நானோ அல்ல. இயக்குனர் என்னிடம் கதை வந்து சொன்னது என்னுடைய அப்பாவுக்கே தெரியாது என்றும் தயாரிப்பு நிறுவனம் யாரும் அந்த கதைக்கு அந்த நேரத்தில் ரிஸ்க்கு எடுக்க விரும்பவில்லை அதனால் தான் படம் எடுக்க தாமதம் ஆகிவிட்டது.
ஆனால் இப்போது நல்ல கன்டென்ட்டை புரிந்து கொள்ள பலரும் தொடங்கி இருக்கிறார்கள். அதுவே சந்தோஷம். அதுபோல பத்து வருடங்களுக்கு முன்பு நடந்ததை நித்திலன் மறக்காமல் இப்போது பேட்டியில் பேசி இருக்கிறார் அதுவும் மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார். நித்திலன் இது பற்றி சொல்லும்போது நானும் சாந்தனுவிடம் இந்த படத்தின் கதையை 10 வருடங்களுக்கு முன்பே சொல்லி இருக்கிறேன்.

அப்போது பல தயாரிப்பாளர்களிடம் சாந்தனு பைக்கில் என்னை கூட்டிக்கொண்டு போனார். ஆனால் அப்போது யாரும் அந்தப் படத்தை எடுப்பதற்கு தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications