நடிகர் சிங்கம் புலியின் மனைவி இவ்ளோ பெரிய பதவியில் இருக்கிறாரா? குடும்ப ரகசியம் வெளிவந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிங்கம்புலி தன்னுடைய மனைவி குறித்து பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் தன்னுடைய மனைவி ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாக சிங்கம்புலி பேசி இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதிகமானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் சிங்கம் புலி பல திரைப்படங்களில் உதவி இயக்குனர், கதை ஆசிரியர், இயக்குனராகவும் இருந்தாலும் இதுவரைக்கும் காமெடி நடிகராகவே நடிந்து நடித்து வந்த நிலையில் முதல் முறையாக மகாராஜா திரைப்படத்தின் மூலமாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். இது ஒரு பக்கம் பாராட்டுகளையும் மற்றொரு பக்கத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Television Sun TV Entertainment

நடிகர் சிங்கம்புலி பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, அதற்கு பிறகு ரெட், மாயாவி படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். ஆனாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு கிடைக்கத் தொடங்கியது.

அந்த ஆக்சிடென்ட்க்கு பிறகு வாழ்க்கை மாறிடுச்சு..காப்பாற்றியது வேப்பமரம் தான்! நடிகர் செந்தில் எமோஷனல்
அந்த படத்தில் குழந்தை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கம்புலியை யாராலும் மறந்து இருக்க முடியாது. அதிலும் தன்னுடைய அப்பாவான ஜி எம் குமாரிடம் அப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே? என்று கேட்பது, பிறகு எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது நீங்க எல்லாம் மாடு முட்டிதான் சாகப் போறிங்க என்று சாபம் கொடுப்பது போன்ற பல இடங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பால் பலருடைய மனதையும் கவர்ந்திருந்தார்.

அதற்குப் பிறகு நடித்த படங்களில் எல்லாம் சிங்கம்புலி காமெடி கேரக்டரிலேயே நடித்து வந்திருந்தார். ஆனால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜாவில் தான் அவர் பாலியல் வன்புணர்வு செய்பவராக நடித்திருக்கிறார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்து வருகிறது. படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் ஏன் சிங்கப்புலி இப்படி செய்து விட்டார் என்பதுதான் கேள்வியாக வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சிங்கம் புலி கொடுத்த பேட்டியில் நான் இந்த படத்தில் நடித்ததை பலர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் என்னுடைய மனைவி இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. என்னுடைய குழந்தைகள் அந்த படத்தை பார்த்து விட்டார்கள் ஆனால் அவர்கள் சரி எது தவறு எது என்று சொல்லவில்லை. ஆனால் மனைவி படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாரோ என்று தெரியவில்லை என்று சொல்லி இருந்தார்.

அதோடு என்னுடைய மனைவி என் மாமன் பொண்ணு தான். அவங்களோட பூர்வீகம் அந்தமான். இப்போ ஆர்மியில் கர்னலா இருக்காங்க. அவங்க பெரும்பாலும் இந்தி படங்கள் தான் பார்ப்பாங்க. இதுவரை என்னோட ஐந்து படங்கள்தான் பார்த்திருப்பாங்க. இப்ப மகாராஜா படத்தை பாத்துட்டு என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே. அவர்களை எப்படி பேஸ் பண்ண போறேன்னு தெரியல என்று அந்த பேட்டியில் சிங்கம் புலி பேசியிருக்கிறார்.

இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் காமெடி நடிகராக எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சிங்கம் புலியின் மனைவி ராணுவத்தில் கர்ணலாக இருக்கிறார். இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் மனைவியை பற்றி சிங்கம் புலி பெரியதாக இதுவரைக்கும் எந்த பேட்டியிலும் பேசவில்லையே என்று அதிசயப்பட்டு கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+