சினிமா வாழ்க்கையில் பல பிரச்சனைகள்! அழுத படியே மேடையில் கை நீட்டி சிவகார்த்திகேயன் கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலமாக பிரபலமடைந்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் திரைப்படங்களில் முன்னணி நடிகராக இருக்கிறார். இந்த நிலையில் அவர் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பில் கண்கலங்கி மேடையில் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தொடர்ச்சியாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் குறித்து பல பிரச்சனைகள் வெடித்து கொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் கண் கலங்கி பேசியிருக்கும் வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள். அந்த வகையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சமீபத்தில் சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும், மிமிக்கிரி செய்பவராகவும், தொகுப்பாளராக, தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு தொகுப்பாளராக மாறி இப்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருடைய திறமையின் காரணமாக ஒவ்வொரு இடங்களிலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார். அதுபோல இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் குறித்து சில சர்ச்சைகளும் வெடித்து கொண்டிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குறித்து சிவகார்த்திகேயன் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படியான நிலையில் அதைத்தொடர்ந்து அவர் அமரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படம் போஸ்டர் வெளியானதுமே திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று சிலர் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து சாய்பல்லவி நடிக்கிறார். ராணுவ அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை தான் இந்த திரைப்பட கதை என்று கூறப்படுகிறது. அதுபோல இந்த திரைப்படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் செய்த டிரான்ஸ்பர்மேஷன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது.
இதில் சிவகார்த்திகேயன் கடின உடற்பயிற்சிகள் பார்த்து பலரும் வியந்து போய் இருந்தனர். அதே நேரத்தில் இந்த திரைப்படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே அமரன் பெயரில் நடிகர் கார்த்திக் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு அமரன் திரைப்படம் வெளியாகி இருந்தது.
அதே நேரத்தில் இந்த திரைப்படத்தின் டீசரை பகிர்ந்த சிவகார்த்திகேயன், "மேஜர் முகுந்த் வரதராஜனாக நான் நடித்ததற்கு ரொம்பவும் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு எல்லோரும் தயாராகுங்கள்" என்று ஒரு பதிவையும் வெளியிட்டு இருந்தார். இப்படியான நிலையில் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், "என்னுடைய சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்சனைகள், வலிகள் உள்ளது. அதனை பகிர்ந்து கொள்ள எனக்கு அப்பாவோ அண்ணனோ இல்லை.... ஆனால் அப்படியான காலங்களில் எனது ரசிகர்களாக நீங்க இருந்தீங்க, இன்னும் இருப்பீங்க.." என்று கண்கலங்கியபடி கைநீட்டி உருக்கமுடன் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications