Sivakumar: என் நிஜ பெயரே வேற.. ஏவிஎம் சரவணன் பெயரை தான் என் மகனுக்கு வைத்தேன்! கலங்கிய நடிகர் சிவகுமார்
சென்னை: தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் நிறுவனத்தின் அனைத்துப் பணிகளையும் நிர்வகித்து வந்த திரு. ஏ.வி.எம் சரவணன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார். 86 வது பிறந்தநாளை கொண்டாடிய அடுத்த நாளே அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்படப் பல அரசியல் பிரபலங்களும், திரைக் கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதில் நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தி விட்டு தன்னுடைய நிஜப் பெயரை மாற்றி வைத்த சரவணன் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார்

நடிகர் சிவகுமாரின் அஞ்சலி
அந்த வகையில், நடிகர் சிவகுமார் ஏ.வி.எம். சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது ரசிகர்களை உருக்கியது. 1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்தப் பெயர் பழனிசாமி. அந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார் தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சிவகுமார்.
நினைவு பெயர்
அவரின் நியாபக அர்த்தமாகத் தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன் என்று கூறினார். என்னுடைய முதல் படத்துல நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன். அப்போ சரவணன் சார் என்னிடம் மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம்' என்று சொன்னார்.
நம்பிக்கை கொடுத்தது அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று என்று அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
அடுத்த தலைமுறைக்கும் ஆதரவு
என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு பேரழகன், அயன் படங்களைக் கொடுத்தார்கள் - இரண்டுமே வெற்றிப் படங்கள் தான். சூர்யா வாழ்வில் மறக்க முடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள் என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.
ஏ.வி.எம் நிறுவனம் பற்றி சிவகுமாரின் பெருமிதம்
ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்படப் பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள் என்று ஏ.வி.எம் நிறுவனத்தின் பெருமையைச் சொன்னார்.
"88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்" என்று முடித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் அஞ்சலி
நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திப் பேசினார்: ஏ.வி.எம் சரவணன் மிகப் பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். எப்போதும் வெள்ளைத் டிரஸ் போட்டிருப்பார். அதே போல அவர் உள்ளமும் வெள்ளையாக இருக்கும்.
சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். பத்து நிமிடம் அவரிடம் பேசினால் 'அப்பாச்சி அப்பாச்சி' என அவரது தந்தையை (மெய்யப்பச் செட்டியார்) நினைவு கூறுவார். ஏ.வி.எம் நிறுவனத்தில் நான் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அந்த ஒன்பது படங்களுமே பெரிய ஹிட். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார் என்றால் அது மிகை ஆகாது.
80-களில் மிகப் பெரிய பிரமாண்டப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 'முரட்டுக் காளை'அதேபோல் 20-களில் பிரமாண்டப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் 'சிவாஜி'. அப்படிப்பட்ட பொருட்செலவில் இப்போதும் ஒரு பிரமாண்டப் படத்தை எடுக்க நினைத்தார். அது நடக்காமலே போய்விட்டது" என்று வருத்தம் தெரிவித்தார்.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications