முடிஞ்சா இதுக்கு பதில் சொல்லுங்க? போன் பார்த்தா கொன்னுடுவேன்! மேடையில் கொந்தளித்த சிவகுமார்
சென்னை: சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார் தான் சொல்லும் கணக்குக்கு அங்கு இருப்பவர்கள் யாரேனும் பதில் சொன்னால் நான் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதோடு நான் சொன்ன கணக்கை போனில் பார்த்தால் கொன்னுடுவேன் என்று அவர் மிரட்டி இருக்கும் நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகுமார் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதிலும் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து வந்த சிவக்குமார் சின்னத்திரையிலும் நடித்திருக்கிறார். ஆனால் சினிமா மற்றும் சீரியல் என எல்லாவற்றையும் இப்போது விட்டு விலகி விட்டார்.

இந்த நிலையில் சிவகுமார் உடைய இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். சிவக்குமார் பழம்பெரும் நடிகராக இருந்தாலும் இப்போது உள்ள பலருக்கும் அவரை தெரிந்திருக்கும் காரணம் அடிக்கடி அவர் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தன்னை புகைப்படம் எடுத்த ஒருவருடைய செல்போனை பிடுங்கி சிவக்குமார் உடைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல மேடைகளிலும் ஆக்ரோஷமாக பேசுவார். இன்று சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவகுமார் பேசும்போது நான் நான்காம் வகுப்பில் போட்ட ஒரு கணக்கை இப்போ போடுறேன். அதற்கு விடை இங்கு வந்திருக்கும் யாராவது சொல்லுங்க பார்ப்போம்.
சரியா கணக்குக்கு விட சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு போறதுக்கு முன்னாடி ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போறேன் என்று சொல்லி அந்த கணக்கை சொல்கிறார். அதில் "கால் அரைக்கால் காசுக்கு.. நால் அரைக்கால் கத்திரிக்காய்.. ஒரு காசுக்கு எத்தனை கத்திரிக்காய்?". இதற்கான விடையை அஞ்சு நிமிஷத்துக்குள்ள நீங்க சொல்லணும். இதுக்கு விடை சொல்லனும்னா கால், அரை, வாய்ப்பாடு படிச்சிருக்கணும்.
இதுக்கு யாராவது போனை நோண்டுனா கொன்னுடுவேன். இங்க ஒருத்தி நான் சொன்னதும் போன்ல அடிச்சு பாக்குறா அந்த வேலை வச்சுக்க கூடாது. மைண்ட்ல சொல்லு இதையெல்லாம் நாங்கள் நாலாம் வகுப்பிலேயே படிச்சிட்டு அப்புறம் ஸ்கூலுக்கு போயி 6, 7, 8, வகுப்புக்கு ரெண்டு முக்கால் ரூபாய் பீஸ் கட்டி படிச்சிட்டு, அப்புறம் ஒன்பது பத்து 11க்கு ஐந்தே முக்கால் பீஸ் கட்டி படிச்சு முடிச்சு வந்தோம்.
அந்த கடைசி வருஷம் எங்க அம்மா படாத பாடு பட்டதால தான் இந்த அளவுல வந்து நிக்கிறேன். அதற்கு காரணம் எங்க அம்மா தான். என்ன இந்த அளவுக்கு படிக்க வச்சது. எங்க அம்மா தான் அவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. ஆனாலும் சின்ன வருத்தம் இருக்கு நான் ஸ்கூல் படிக்கும்போது குரூப் போட்டோ எடுப்பதற்காக எங்க அம்மாவிடம் அஞ்சு ரூபா பணம் கேட்டேன்.

ஆனால் எங்க அம்மா அது முடியாது அந்த அஞ்சு ரூபாய்க்கு நான் எங்க போவேன், நம்ம தோப்புக்கு வேலைக்கு வந்தவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் நானே இருக்கேன் என்று சொல்லிட்டாங்க. அப்புறம் போட்டோ எடுக்கிற கடைசி நாளில் நானும் என்னோடு சேர்ந்த நான்கு பேரும் ஸ்கூலில் இருந்து வந்தோம்.
நான் ஸ்கூலில் எப்போதுமே நான்காவது ரேங்க் தான் எடுத்தேன். என்னை போல முதல் ரெண்டு ரேங்க் எடுத்தவனுக்கும் வீட்டுல பணம் கொடுக்கல. அதனால எல்லாரும் ஸ்கூலில் இருந்து வந்துட்டோம். வெளியே வரும்போது ஒருத்தன் நிறுத்தி எங்க போற என்று கேட்டான். நான் போட்டோ எடுக்க காசு கொடுக்கல அதனால இப்போ வீட்டுக்கு போறேன் என்று சொன்னேன்.
அதற்கு அவன் நீ காசு கொடுக்காட்டாலும் பரவால்ல நின்னு போட்டோ எடு ன்னு சொன்னான். ஆனா நம்ம காசு கொடுக்காமல் போட்டோ எடுக்க கூடாதுன்னு எனக்கு தன்மானம் தடுத்ததால் வெளிய வந்துட்டேன். இப்ப கூட யாரு வீட்டுக்கு போனாலும் நான் குரூப் போட்டோ பார்க்கவே மாட்டேன். அந்த போட்டோவை பார்க்கும் போது என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துடும்.
அதற்கு பிறகு நான் 100க்கு மேல நடிச்சிருக்கிறேன். 87 நடிகைகளோட கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து நடிச்சிருக்கிறேன். என் முகத்துல 2000 கோடி பிலிம் ஓடி இருக்கு. ஆனா என்னால அஞ்சு ரூபா கொடுத்து குரூப் போட்டோ வாங்க முடியல. அந்த வேதனை எனக்கு ரொம்பவே இருக்கு. அதனால நான் படிச்ச ஸ்கூல்க்கு 50 வருஷம் கழிச்சு போனேன்.
அங்கே இரண்டு வாத்தியாரு ரெண்டு மூணு ஸ்டூடண்ட் இன்னும் இருந்தாங்க. எல்லோரோடும் சேர்ந்து நான் அதே இடத்துல நின்னு போட்டோ எடுத்துட்டு வந்தேன். இப்போ அந்த ஸ்கூல்ல நான்தான் தத்தெடுத்திருக்கிறேன். அந்த ஸ்கூலில் நான் தலைவராய் இருக்கிறேன். அங்கு நல்லா படிக்கிற மாணவர்களுக்கு வருஷா வருஷம் 5,000 உதவித்தொகை வழங்கிக்கொண்டு இருக்கிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியிருக்கிறார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications