அந்த "காளியம்மா" தாய் தான் எல்லாத்துக்கும் காரணம்.. மதுரையில் கொட்டும் மழையில் நெகிழ்ந்த சூரி
சென்னை: நடிகர் சூரி மதுரைக்கு அருகில் தன்னுடைய சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு தமிழ் திரை உலகில் பிரபலமாக இருக்கும் பாடகர்களை வரவழைத்து மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை தானே முன்னின்று நடத்தி உள்ளார். தமிழ் சினிமாவின் காமெடியனாக இருந்து தற்போது கதையின் நாயகனாக புதிய உயரத்தில் இருந்தாலும் தன் சொந்த கிராமத்தில் சூரி செய்துள்ள இந்த செயல் பலரின் பாரட்டைப் பெற்று வருகிறது.
நண்பர்களுக்குள் அரட்டை அடிக்கும் பொழுது ஏதாவது மொக்கை காமெடியை யாராவது கூறினால் என்ன.. சூரி.. காமெடியா..?? என்று கலாய்க்கும் அளவிற்கு தான் ஆரம்பத்தில் சூரியின் காமெடி கதாபாத்திரங்கள் இருந்தது. இருப்பினும் சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முழு நேர காமெடியன் இல்லை என்ற வெற்றிடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு சூரி சிவகார்த்திகேயனுடன் அடுத்தடுத்த படங்களில் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லும் அளவிற்கு காமெடியில் கலக்கி காமெடியென்களில் முன்னணிக்கு வந்தார்.

இந்த பையனுக்குள் ஏதோ... ஒன்னு இருக்குப்பா.. என்று சூரியை பார்த்து கண்டுபிடித்த இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய விடுதலை படத்தின் மூலம் கதை நாயகனாக சூரிக்கு புது அடையாளத்தை கொடுத்தார். முன்னணி நடிகர்கள் பலரே வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கும் பொழுது தனக்கு கிடைத்த இந்த ஜாக்பாட் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சூரி தனது பெஸ்டை கொடுத்து விடுதலை படத்தில் அனைவரையும் அசர வைத்து விட்டார். அதைத்தொடர்ந்து விடுதலை2, கருடன் ,கொட்டுக்காளி என்று அடுத்தடுத்து படங்களின் கதையின் நாயகனாக பிசியாக நடித்து வந்தாலும் தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு ஆரம்பம் முதல் முடிவுவரை முன்னின்று அனைத்து நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார்.
நடிகர் சூரிக்கு மதுரைக்கு அருகில் உள்ள ராஜாகூர் கிராமம் தான் சொந்த ஊராகும்.அவ்வப்போது கோவில் திருவிழாவிற்கு வந்து போனாலும் தற்போது தமிழ் சினிமாவின் புதிய கதை நாயகனாக உயர்ந்து பிறகு அனைத்து நடவடிக்கைகளும் மீடியா மற்றும் சமூக வலைதளங்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முறை சூரி ராஜாக்கூர் கோவில் திருவிழாவிற்கு வந்து திருவிழா நிகழ்ச்சிகளை தானே முன்னின்று நடத்தியதும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
விழா மேடையில பேசிய நடிகர் சூரி "தான் ..கேட்டுக்கொண்டதற்கிணங்க விழாவிற்கு வந்த அனைத்து பிரபல பின்னணி பாடகர்களுக்கும் மற்றும் குழுவினருக்கு நன்றி கூறினார் மற்றும் இந்த முறை தங்களுடைய கோயில் திருவிழா மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற்றதாகவும், தன்னுடைய பல வெளிநாடு வாழ் நண்பர்கள் விழாவை பற்றி சிறப்பாக பேசியதாகவும் கூறி அனைவருக்கும் நன்றி கூறுவதாக உணர்ச்சி பொங்க பேசி இருக்கிறார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications