சூரியின் வீட்டில் யாருங்க இது? கலர்புல் கூட்டம்.. அதைவிடுங்க, அலங்காநல்லூரில் இன்று கருப்பன் அதிரடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரையில் பொங்கல் பண்டிகையை தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடினார் நடிகர் சூரி.. இது தொடர்பான வீடியோவையும் சோஷியல் மீடியை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அதுமட்டுமல்ல, இன்றுதான் சூரியின் கருப்பன் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம்வந்து, இன்று ஹீரோவாக உயர்ந்திருப்பவர் சூரி.. மதுரையை சேர்ந்த நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த காளையை இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டிக்கு இறக்கிவிடவும் போகிறார்.

television soori actor soori

4 நாட்களுக்கு முன்பு, இது தொடர்பாக வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், தன்னுடைய காளைக்கு ரோஜாப்பூ அணிவித்திருந்தார்.. மேலும், அந்த காளைக்கு நடிகர் சூரி அன்புடன் உணவு வழங்கி, அதன் நெற்றியில் முத்தம் தந்தார்.. பிறகு காளைக்கு தீபாரதனை காட்டி, அதன் கயிற்றை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார். தாடியுடன் காணப்பட்டாலும், பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்துள்ளார் சூரி.

கருப்பன்: இந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பன் என்கிற தனது காளையுடன் வீடியோ வெளியிட்டிருந்ததுடன், " பொங்கலுக்கு களத்தில் இறங்க தயாராக நிற்கிறான் கருப்பன்" என இந்த வீடியோவில் அவர் கேப்ஷனும் பதிவிட்டிருந்தார்.

சூரியின் இந்த காளை இன்று 16ம் தேதி நடைபெறக்கூடிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க போகிறது. எனவே, சூரி உள்ளிட்ட குடும்பத்தினரும், நண்பர்களும் மிகவும் ஆர்வத்தை எதிர்நோக்கி உள்ளனர். கடந்த வருடமும், நடிகர் சூரியன் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம்: இந்நிலையில், தன்னுடைய ஒட்டுமொத்த சொந்த பந்தத்துடன் பொங்கலை கொண்டாடியிருக்கிறார் சூரி.. இது தொடர்பாகவும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்..

television soori actor soori

அதில் தன்னுடைய குடும்பத்தினருடனும் சொந்த பந்தங்களுடனும் சேர்ந்து பொங்கல் வைத்துள்ளார் சூரி.. அனைவருமே ஒரே மாதிரியான புது டிரஸ் அணிந்துள்ளனர்.. ஆண்கள் அனைவரும் வெள்ளை பட்டு வேட்டி சட்டையிலும், பெண்கள் வயலட் கலர் பட்டுப்புடவையிலும், இளம்பெண்கள் வயலட்நிற பாவாடை தாவணியிலும் காணப்படுகிறார்கள். அனைவருடனும் சேர்ந்து பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்து, தன்னுடைய வீட்டின் வாசலில் பெரியவர்கள், குழந்தைகளுடனும் சேர்ந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார் சூரி.

வாழ்த்துக்கள்: இந்த வீடியோவுக்கு சூரி, "குடும்பத்திற்குள் விட்டுக்கொடுங்கள்' அன்புகாட்டுங்கள் ! அனுசரித்துப் போங்கள் ! இந்தக் குடும்பத்தில் ஒருவனாக நிற்பதே என் கொடுப்பினை ! கூடுவோம்... கொண்டாடுவோம்! இது எங்கள் வீட்டுப் பொங்கல்.." என்று பதிவிட்டுள்ளார்.. இதைப்பார்த்த சூரியின் ரசிகர்கள் அவருக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறி, உற்சாகமாக கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+