மாரிமுத்து உண்மையில் எப்படினு தெரியுமா? அவரோடு அதற்காக சண்டை போட்டேன்.. நடிகர் சௌந்தர்ராஜா எமோஷனல்
சென்னை: பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் இருந்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உடல்நல குறைவால் மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில் அங்கு காலமானார்.
அவர் மறைந்தாலும் அவருடைய நினைவுகளை மறக்க முடியாத ரசிகர்களும், பல பிரபலங்களும் அவரை பற்றிய பல தகவல்களை தொடர்ச்சியாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர் சௌந்தர்ராஜா மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து ஆரம்பத்தில் துணை இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக மாறி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல்தான். இந்த சீரியலுக்கு பிறகு அவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைய தொடங்கி இருந்தார்.
அதைத் தொடர்ந்து தான் அவருக்கு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 போன்ற படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அவருடைய திடீர் இறப்பால் அவருடைய ரசிகர்களும் அவரோடு நெருங்கி பழகிய நண்பர்களும் இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் மாரிமுத்தோடு பல திரைப்படங்களில் நடித்த நடிகர் சௌந்தர்ராஜா மாரிமுத்து பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் அதாவது மாரிமுத்துவுக்கும் எனக்கும் பழக்கம் என்பது சினிமாவை தாண்டி மேலும் நெருக்கமானது ஏனென்றால் நானும் அவரும் ஒரே ஊர்காரங்க எனக்கும் தேனி மாவட்டம் தான் அதனால் நாங்கள் நடிப்பை தாண்டியும் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.
எல்லோருக்கும் மாரிமுத்துவை எதிர்நீச்சல் சீரியலுக்கு பிறகு தான் தெரிய ஆரம்பித்தது ஆனால் அவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார் என்பது பற்றி என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார் எனக்கு அவர் ஒரு ரோல் மாடல் தான ஆனாலும் ஒரு முறை எனக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நானும் அவரும் ஒரே கேரவனில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம் அப்போது அவர் நடித்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார் அந்த திரைப்படத்தில் கதாநாயகன் முகத்தில மாரிமுத்தோடு சேர்ந்த ஒரு சிலர் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் அப்போது நான் அதைப் பார்த்து இப்படி எல்லாம் காட்சிகள் வைப்பது தப்பு என்று கருத்து தெரிவித்தேன்.
ஆனால் மாரிமுத்து இல்ல இது ஒரு கஷ்டப்பட்டவருடைய வலி இப்படி எல்லாம் காட்சிகள் வைத்தால் தான் பலருடைய நிலைமை இப்பவும் இப்படி இருக்கிறது என்பது தெரியவரும் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஆனால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்போது ஒரு கட்டத்தில் கோபமான மாரிமுத்து என்னை நிறுத்துப்பா என்று கத்தி விட்டார் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கூட பலர் நாங்கள் சண்டை போடுவதாக நினைத்து ஓடி வந்தார்கள்.
அதற்குப் பிறகு அவர் என்னிடம் சில வார்த்தைகளை சொல்லி புரிய வைத்தார் அதற்கு பிறகு தான் உண்மையில் எனக்கும் அந்த காட்சிகள் வைத்தது சரி என்று புரிந்தது அந்த அளவிற்கு சினிமாவை மட்டுமல்லாமல் மக்களின் உணர்வுகளையும் சரியாக உணர்ந்தவர் தான் மாரிமுத்து அவருடைய இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது என்று எமோஷனலாக நடிகர் சௌந்தர்ராஜா அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications