சஞ்சீவ் என் நண்பன்! ஆனால் இந்த விஷயத்தால் தான் பிரச்சனை.. போன் பண்ணி சொன்ன வார்த்தை.. ஸ்ரீ எமோஷனல்
சென்னை: சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீ தன்னுடைய பல வருட நண்பரான சஞ்சீவ் உடன் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு தான் செய்த செயல் சஞ்சீவை எப்படி பாதித்தது என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
நடிகர் ஸ்ரீ சின்னத்திரையில் பலருக்கும் பரீட்சையமானவர் தான். ஆரம்பத்தில் சிவசக்தி, அகல்யா, தலையணை பூக்கள், யாரடி நீ மோகினி, வானத்தைப்போல போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதோடு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், கமல்ஹாசன் நடித்த விக்ரம் போன்ற பல படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இவர் நடிக்கும் திரைப்படங்களில் சின்ன சின்னதாக இவருடைய காட்சிகள் அந்த திரைப்படத்தில் இடம் பிடித்தாலும் அது அழுத்தம் உள்ள கேரக்டராக இருக்கிறது. அதுபோல சின்னத்திரையில் ஒரு சில நடிகர்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இணைந்து பேட்டி கொடுப்பதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீ மற்றும் சஞ்சீவ் இருவரும் பல பேட்டிகளில் ஒன்றாக பேசியிருக்கிறார்கள்.
இருவரும் குழந்தை பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். நடிகர் சஞ்சீவ், விஜய் போலவே ஆக்டிங் செய்கிறார் என்று அதிகமாக ட்ரோல்களில் சிக்கி வருகிறார். அதுபோல பேட்டிகளில் கூட அவரிடம் விஜய் பற்றி எதையாவது கேட்கும்போது தன்னுடைய பள்ளி கல்லூரி காலங்களில் விஜய் எப்படி நடந்து கொண்டார், எப்படி பழகுவார் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதுவும் அடிக்கடி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஸ்ரீ கருத்து தெரிவித்திருந்தார். அதில் சஞ்சீவ்விடம் நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன் டேய் நீ விஜய் போல பண்ணாத, விஜய் பற்றி எந்த பேட்டியும் பேசாத ஆரம்பத்தில் நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்தாலும் இப்போ அதை பேசுவதால் அவரை வைத்து நீ பிரபலம் தேடுவேன்னு நினைப்பாங்க என்று சொல்லி இருக்கிறேன். ஆனால் அவன் கேட்கல என்று விளையாட்டாக சஞ்சீவ் பேசியிருந்தார்.

இது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி நடிகர் ஸ்ரீ பேசுகையில் நானும் ஸ்ரீயும் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே நண்பர்களாக இருக்கிறோம். ஆனாலும் நான் அந்த பேட்டியில் அப்படி பேசி இருக்கக் கூடாது. நண்பர்களிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அவரிடம் நேரடியாக நான் சொல்லி இருக்கணும்.
ஆனால் அன்றைக்கு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வேகத்தில் அதைச் சொல்லிவிட்டேன். அது அவனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று எனக்கு பிறகு தோன்றியது அதனால் அவனிடம் போன் செய்து நான் மன்னிப்பு கேட்டேன். அவனும் பரவாயில்லை என்று சொன்னான். ஆனால் நான் எதுவா இருந்தாலும் அவன் முகத்துக்கு நேராக பேசியிருக்க வேண்டும் என்று எனக்கு பிறகு கஷ்டமாக இருந்தது. அவனுமே அதை பெருசா எடுத்துக்கல என்று ஸ்ரீ விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications