சின்னத்திரை நடிகரின் வீட்டில் விஜய் செய்த செயல்..இத்தனை வருடங்களுக்கு முன்பே இப்படியா??
சென்னை: நடிகர் ஸ்ரீகுமாரின் வீட்டில் விசேஷத்தில் கலந்துகொண்ட விஜய் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் ஸ்ரீகுமார் பகிர்ந்துள்ளார்.
யாரும் பார்க்காத விஜயின் புகைப்படங்களை தற்போது பார்த்ததும் ரசிகர்கள் பலர் அதை பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்ரீ குமார் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரை ஆக இருந்தாலும் சரி பிரபலங்கள் என்று ஆகிவிட்டாலே அவர்கள் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில்தான் பல வருடங்களுக்கு முன்பு விஜய் எப்படி இருந்தார் என்று தற்போது சின்னத்திரை நடிகர் ஸ்ரீ குமார் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர் உச்சுக்கொட்டி அசந்து போயிருக்கின்றனர். நடிகர் விஜய் என்று பெயரைச் சொன்னாலே பலருக்கும் புது உற்சாகம் வந்துவிடும். அந்த அளவிற்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும விஜய்யின் பல வருடங்களுக்கு முந்தைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வானத்தைப்போல சின்ராசு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் சின்ராசு கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீகுமார் தற்போது தன்னுடைய மற்றும் தன்னுடைய சகோதரியின் திருமணத்தின்போது விஜய் கலந்து கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோக்கள் தான் தற்போது விஜய் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்ததும் பலர் இவர்களுக்குள் இப்படி ஒரு நட்பு இருக்கிறதா என்று திகைத்து போய் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பலர வேற லெவல் என்று வாழ்த்துக்களையும் கூறிவருகிறார்கள்.

ரசிகர்களின் கேள்வி
சின்னத்திரையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரீகுமார் திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் என்பதை தற்போது பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இவரை பல வருடங்களாக சீரியல்களில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இவருக்கு திருமணம் முடிந்ததே தெரியாமல் தான் இருக்கிறது. அதனால் தான் இவர் வெளியிட்ட போஸ்ட் பார்த்ததும் உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா என்று பலர் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். ஸ்ரீ குமாருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.

மறக்க முடியாத நினைவுகள்
ஸ்ரீகுமாரின் மனைவியும் திரைத்துறையை சார்ந்தவர் தான் என்பது பலருக்கும் தெரியாமல் தான் இருந்து வந்துள்ளது. அவருடைய மனைவி தோழா தோழா தோள் கொடு தோழா எனும் பாடல் மூலமாக பிரபலமடைந்த ஷமிதா தான். இவரும் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்யோடு இருக்கும் பலவருட நட்பை பற்றி தெரிவிக்கும் வகையில் தன்னுடைய திருமணத்திலும், தன்னுடைய சகோதரியின் திருமணத்திலும் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு பலர் லைக் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications