அந்த நடிகையோடு வெளியான போட்டோ..! 10 நாளா சாப்பிட கூட முடியல! வேதனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்டாலின் முத்துவின் புகைப்படம் ஒன்று சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது குறித்து வருத்தமாக பேசி இருக்கிறார்.
பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் பற்றிய வதந்திகள் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும். உடன் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளோடு கிசுகிசுப்பு வெளியாகும் போது சிலர் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் ஒரு சிலர் தங்கள் பற்றிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து விடுவார்கள்.

பொதுவாக பிரபலமாக இருக்கும் நபர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, அவர்களுக்கும் குழந்தைகள் இருக்கிறது என்று சிலர் நினைத்துப் பார்ப்பது இல்லை. தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை பற்றி வதந்தியான விஷயங்களையும், சர்ச்சையான விஷயங்களையும் பேசியும் பரப்பியும் வருகிறார்கள். அதுபோலத்தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகத்தில் மூர்த்தி ஆகவும் இரண்டாவது பாகத்தில் பாண்டியனாகவும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்டாலின் முத்து குறித்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஸ்டாலின் முத்துவுடன் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவர் புகைப்படம் எடுத்திருக்கிறார். அது சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து எடுத்த புகைப்படம் தான். அந்த புகைப்படத்தை ஒருவர் இணையத்தில் பதிவிட்டு இந்த தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள் என்று பகிர்ந்திருக்கிறார். இதை உண்மை என்று நம்பி பலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அதுபோல ஒரு சிலர் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து இருக்கிறார்கள். இது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இதனால் வருத்தமான அந்த நடிகை ஸ்டாலினுக்கு போன் செய்து ஏன் இப்படி பண்ணுறாங்க என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த நடிகையின் மகனுக்கே திருமணம் முடிந்து பேரன் பேத்தி எடுத்துவிட்டார். அந்த நடிகையோடு ஸ்டாலின் சேர்த்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனதால் ஸ்டாலின் குடும்பத்தினர் இது குறித்து ஸ்டாலினுக்கு போன் செய்து விசாரித்துக் கொண்டே இருக்கிறார்களாம். இதனால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை பத்து நாட்களுக்கு மேலாக தூக்கமிலலாமல் தவிக்கிறேன் என்று ஸ்டாலின் பேசி இருக்கிறார். அதுபோல இது குறித்து ஸ்டாலின் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறாராம்.

அதுபோல ஸ்டாலின் தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியது யார் என்று விசாரிக்கையில் அவருடைய சொந்த ஊர் பக்கத்தில் உள்ள ஒரு யூடியூபர் தான் இது போல புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறாராம். மேலும் இதே போன்று தொடர்ந்து ஈடுபட்டால் தான் கடுமையாக நடவடிக்கை நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications