காதலித்து தான் அந்த நடிகையை கல்யாணம் பண்ணினோம்.. ஆனால் பிரிஞ்சிட்டோம்! நடிகர் சுரேஷ் எமோஷனல்
சென்னை: நடிகர் சுரேஷ் தன்னுடைய காதல், திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். நடிகை ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் திருமண வாழ்க்கை நிலைக்காமல் விவாகரத்து ஆகிவிட்டது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த சுரேஷ் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்திருக்கிறார். ஆனால் சில வருடங்களாக தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

கதாநாயகனாக நடித்து வந்து சுரேஷ் சில வருடங்களுக்கு முன்பு அசல் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாகவும், தலைவா படத்தில் போலீஸ் ஆபீஸராகவும் நடித்து இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில், நான் என்னுடைய வாழ்க்கையில் சில தவறுகளை செய்திருக்கிறேன். அதில் திருமணமும் ஒன்று. நான் நடிகை அனிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவரும் நானும் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறோம். தமிழிலும் தெலுங்கிலும் அந்த படம் வெளியானது. அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்யலாம் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் அப்பா திருமணம் செய்ய வேண்டும் என்று அவசரப்படுத்தியதால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் சில வருடங்களில் எங்களுக்குள் புரிதல் இல்லாமல் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த திருமண வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு நல்லது நடந்தது.. என்னுடைய மகன் கிடைத்தார்.

என்னுடைய மகன் இப்போது வெளிநாட்டில் தான் வசித்து வருகிறார். அவருக்கு நடிப்பில் விருப்பம் கிடையாது. அவருடைய மனைவியும் வெளிநாட்டு பெண் தான் அதனால் அவர் குடும்பத்தோடு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்று சுரேஷ் கூறியிருக்கிறார்.
அதோடு சுரேஷின் தந்தை எம்எஸ் கோபிநாத் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் 34 படங்களை தயாரித்து இயக்கி இருக்கிறார். நடிகர் சுரேஷ் 80ஸ் காலகட்டத்தில் இறுதியில் சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தாலும் 90ஸ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான். பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சுரேஷுக்கு அந்த நேரத்தில் அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்கள் கிடைத்தது.

அதே நேரத்தில் சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுவதற்கு முன்பு 7 தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து இருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் ஆறு சீசன்களாக தொகுத்து வழங்கி இருந்தார். இப்போது அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு அவருடைய தற்போதைய நிலை அதிர்ச்சியை கொடுத்திருக்கும். ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த சுரேஷ் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications