வெள்ளை பணமா? கருப்பு பணமா? காலண்டரை தொங்கவிட்டு கிழித்து! சூர்யாவின் நிஜ முகம்! திருப்பதியில் வன்மம்
சென்னை: "தானத்தில் சிறந்த கல்வி தானத்தை நடிகர் சூர்யா இன்று செய்து கொண்டிருக்கிறார். கடவுள் நேரடியாக வரமாட்டார்.. மனிதரூபத்தில்தான் உதவி செய்வார்.. அப்படி மனித உருவத்தில் அனுப்பப்பட்ட கடவுளாக சூர்யாவை பார்ப்பதில் தவறொன்றுமில்லை.. அகறம் அறக்கட்டளையின் 15ம் ஆண்டு விழா அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது" என்று சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, சூர்யா மீது தொடர்ந்து வன்மம் காட்டப்படுவதாக கூறியிருக்கிறார்.

அவர் பேசும்போது, "ஜெய்பீம் படத்தில் ஒரு காலண்டரை குறிப்பிட்டு, பாமக பிரச்சனையை கிளப்பியது.. நல்ல மனிதனை எத்தனை பக்கமிருந்து தாக்குவீர்கள்? சூர்யா படங்கள் நன்றாக இல்லையென்றால், தாராளமாக விமர்சனம் செய்யலாம்.. கங்குவா படம் நல்ல படமில்லை என்பது என்னுடைய கருத்தும்தான்.. அதை விமர்சிக்கலாமே? தனிநபர் விமர்சனம் கூடாது..
காலண்டரை தொங்க விட்டு
ரெட்ரோ படமும் அப்படித்தான்,. என்னமோ இன்றைக்கு நடிக்கும் அனைத்து நடிகர்களின் படமும் சூப்பராக ஓடுவது போலவும், ரெட்ரோ படம்தான் ஓடாமல் போய்விட்டதுபோலவும் டார்கெட் செய்கிறார்கள்..
ரெட்ரோ படம் கமர்ஷியலான, ஜனரஞ்சகமான சுமாரான படம்தான்.. குறைகள் இருந்தது உண்மைதான், அதுக்காக வன்மத்தை கொட்டக்கூடாது. நீட் பற்றி கருத்து சொன்னால், கோயிலை பற்றி கருத்து சொன்னால், காலண்டரை தொங்கவிட்டு கருத்து சொன்னால், உடனே வரிந்து கட்டிக் கொண்டு, சூர்யாவின் படத்தை ஒன்றுகூட ஓடவிடாமல் செய்ய கிளம்பியிருக்கிறார்கள்.
அதையும் தாண்டி சூர்யா சினிமாவிலேயே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.. இப்படியெல்லாம் நினைத்தால், உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்குகூட உதவி செய்ய தோன்றாது..
பிளாக் மணியா? ஒயிட் மணியா?
மழை, வெள்ளம், பேரிடர் என எது வந்தாலும், கேபிஒய் பாலா என்ற சின்ன பையன், தண்ணிக்குள்ளே இறங்கி சாப்பாடு தர்றார், மருந்து தர்றார்.. அதுபோல இவங்க யாராவது சேற்றிலும், மழையிலும் இறங்கியிருக்கிறார்களா?
உடனே கேபிஒய் பாலாவுக்கு காசு எங்கிருந்து வருகிறது? என்று பாலாவையும் விமர்சிக்கிறார்கள்.. பிளாக் மணியா? ஒயிட் மணியா? ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள்.. எந்த பணமாக இருந்தால் என்ன? தனக்கு கிடைக்கும் பணத்தை வீட்டிற்குள் பூட்டி வைத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கு தர நினைப்பதையும், பசியாக இருப்பவர்களுக்கு சாப்பாடு போடுவதையும் முதல்ல பாராட்ட கத்துக்குங்க..
அண்ணா "அ" போடணும்
தானத்தில் சிறந்த கல்வித்தானத்தை சூர்யா இன்று செய்து கொண்டிருக்கிறார். கடவுள் நேரடியாக வரமாட்டார்.. மனிதரூபத்தில்தான் உதவி செய்வார்.. அப்படி மனித உருவத்தில் அனுப்பப்பட்ட கடவுளாக சூர்யாவை பார்ப்பதில் தவறொன்றுமில்லை.. அந்த விழா அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது..
"அண்ணா, மேடைக்கு வாங்க, படிக்கவே முடியாத என்ற நிலைமை வந்தபோது, எனக்கு கல்வி தந்தீங்க.. என்னுடைய மகளுக்கு நீங்கதான் அரிசியில் 'அ' போடணும்" என்று சொன்னார்.. உடனே சூர்யாவும், அந்த பிஞ்சு குழந்தையின் கையை பிடித்து, 'அ' போட்டாரே, அப்படிப்பட்ட மனதை புண்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. அப்படி விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
ஸ்லோமோஷன் வீடியோ
அகரம் அறக்கட்டளை விழா முடிந்து மறுநாளே, குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.. தன்னுடைய குழந்தைகளை வெளியில் காட்ட வேண்டும் என்று நினைப்பது அவரவர் விருப்பம்..நடிகர் என்பதாலேயே எல்லாவற்றையும் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லையே? தன்னுடைய குழந்தைகளை போட்டோ எடுக்க வேண்டாம் என்று சூர்யா சொன்னதை ஏன் பெரிதுபடுத்தி பார்க்கிறார்கள்?
குழந்தைகளை போட்டோ எடுக்க வேண்டாம் என்று அவர் இப்போது சொல்லவில்லை.. ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளை போட்டோ எடுப்பதை விரும்பாதவர்.. அது சம்பந்தமான வீடியோக்கள் பல இணையத்தில் உள்ளன..
போட்டோ எடுக்க வேண்டாம் என்று திருப்பதியிலும் கிட்டத்தட்ட 100 பேரிடம், ஒரு மணி நேரமாக விடாமல் கெஞ்சிக்கொண்டே வந்தார்..
இப்படி சொன்னதுமே, நாகரீகம் தெரிந்தவர்கள், உடனே அவர்களை போட்டோ எடுக்காமல் விலகி சென்றிருக்க வேண்டும். ஆனால், செல்போனை வைத்துக்கொண்டு, அந்த குடும்பத்தினரை மீண்டும் மீண்டும் போட்டோ எடுத்து கொண்டிருந்தால் எப்படி?
இதுதான் உண்மையான முகம்
அப்போதும் ஒருநபர், கூட்டத்தில் புகுந்து போட்டோ எடுக்கும்போதுதான், அவரது கையை பிடித்து இழுத்து, ப்ளீஸ் வேண்டாம் என்றார் சூர்யா.. உடனே இந்த வீடியோவை ஸ்லோமோஷனில் காட்டி, "ரசிகரை தள்ளிவிட்டார் சூர்யா? என்று டிரெண்டாக்குகிறார்கள்.. இதெல்லாம் நியாயமா?
போட்டோ வேண்டாம் என்று சொல்லியும், மேலே விழுந்து போட்டோ எடுத்து தொந்தரவு செய்துவிட்டு, :"இதுதான் சூர்யா முகம்" என்று சொல்வது என்ன நியாயம்?" என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications