பிரபல நடிகர் பிரசாந்த்துக்கு பெண் கிடைச்சாச்சா? தியாகராஜன் சொன்னாரே? விஜயகாந்த் போல டேலண்ட்: பிரபலம்
சென்னை: அந்தகன் படத்தின் சக்சஸ் மீட்டில் பிரசாந்தின் திருமண திட்டம் குறித்து, அவரது அப்பா தியாகராஜனிடம் கேட்டார் கே.எஸ். ரவிக்குமார்... அதற்கு தியாகராஜன், "பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்" என்றார். இதைக்கேட்டு பிரசாந்த் வெட்கப்பட்டார். இந்நிலையில், பிரசாந்த் திருமணம் நடக்க போகிறதா? அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறதா? என்ற கேள்விக்கு, மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார்.
Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "பிரசாந்த்துக்கு இளம்பெண்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு இருந்தது.. காதல் இளவரசன் என்ற பட்டம் இயல்பாகவே கிடைத்தது.. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிரசாந்த்துக்கு ரசிகைகள் பட்டாளம் ஏராளம் உண்டு..

பட்டு வேட்டி, புடவைகள்
பல ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் ஒரு பெரிய பணக்கார பெண், பிரசாந்த்தை விரும்பி திருமணம் செய்ய நினைத்தார்.. பிரசாந்த்தும் அந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம்.. ஆனால், பிரசாந்தின் விதி, கிரகலட்சுமி மூலம்இங்கே வேறு விதமாக போய்விட்டது. கிரகலட்சுமியும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்தான்..
குடும்ப டாக்டருக்கு தெரிந்த பெண் என்பதால், தியாகராஜன் சார் சம்மதித்தார்..
பிரசாந்த்தும் இதற்கு ஓகே சொல்லி திருமணம் நடந்தது.. நிச்சயதார்த்தமே கோலாகலமாக நடந்தது.. தியாகராஜனும்சரி, பிரசாந்த்தும் சரி, பத்திரிகையாளர்களிடம் மிகவும் நட்பாக பழகக்கூடியவர்கள்.. எப்போதுமே பத்திரிகையாளர்களை விட்டுத்தர மாட்டார்கள்.. பிரசாந்தின் கல்யாணத்துக்கு, பட்டு வேட்டி, சேலைகளை வைத்து திருமண பத்திரிகைகளை, பத்திரிகையாளர்களுக்கு தந்தனர்..
பிரசாந்த் குடும்பம் அதிர்ச்சி
பிரசாந்த் திருமணம் அமர்க்களமாக நடந்தது.. ஹனிமூனுக்கு சென்று வந்தபிறகுதான், மனைவிக்கு ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணமானது தெரியவந்தது.. இது தியாகராஜன் குடும்பத்துக்கு அதிர்ச்சியை தந்தது... குடும்ப டாக்டரே தங்களை ஏமாற்றிவிட்டார்களே என்று அதிர்ந்துவிட்டார்கள்..
இதனால் கிரகலட்சுமியிடமிருந்து விலக நினைக்கும்போதுதான், திடீரென வரதட்சணை கொடுமை என்று புகார் தந்தார்.. பிரசாந்த் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தறாங்க என்று வழக்கு தொடுத்தார்.. இப்படி வழக்கு தொடுத்ததுமே, மீண்டும் பிரசாந்த் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது.. காரணம், பிரசாந்த் குடும்பமும் வசதியானதுதான்.. பணம் ஒரு விஷயமே இல்லாதபோது, திடீரென வரதட்சணை கேஸ் தந்தை எதிர்பார்க்கவேயில்லை..
நெருக்கடியில் பிரசாந்த்
வரதட்சணை புகார் என்றால் குடும்பத்தையே உள்ளே தள்ளிவிடும்.. அப்படியொரு நெருக்கடியான நிலைமை பிரசாந்த் குடும்பத்துக்கு வந்தது.. பிறகு தாங்கள் அப்படியெல்லாம் எந்த வரதட்சணையும் கேட்கவில்லை, அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர், எங்களை ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் விளக்கம் தந்து, அந்த வழக்கிலிருந்து வெளியே வரவேண்டியிருந்தது.
இப்படியொரு உண்மை தெரிந்ததுமே, பெண் தரப்பினர் வேறொரு வழக்கை தொடுத்து, இவர்களை சிறை தள்ள நினைத்தார்கள்.. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற சூழ்நிலை மீண்டும் வந்தது.. பிறகு தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து, அந்த பெண்தான் தங்களை ஏமாற்றிவிட்டார் என்று கூறி, அதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் வைத்தபிறகுதான், பிரசாந்த் தரப்பின் நியாயம் புரிந்தது..
மிகப்பெரிய சட்டப்போராட்டம்
இதற்கு பிறகே வழக்கின் போக்கு மாறி, விவாகரத்து நடந்தது.. இவர்களுக்கு பிறந்த மகன், தாயுடன்தான் வளர்ந்து வருகிறார்.. ஆனால், தங்கள் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க தியாகராஜன் சார் கடுமையான சட்டப்போராட்டத்தினை மேற்கொண்டார்..
ஏமாற்றியிருந்தாலும் அந்த பெண்ணை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று சிலர் சொல்லலாம்.. ஆனால், ஏமாற்றத்தை பிரசாந்த்தால் ஜீரணிக்க முடியல..
அதற்கு பிறகு சில படங்களில் நடித்தார்.. சில சொந்தமாக எடுத்தார்கள்.. அந்தகன் படத்தை கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்தார்கள்.. மிகப்பெரிய வெற்றி பெற்றது, 100 நாள் ஓடியது.. பிரசாந்த்துக்கு இன்னமும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்த படம் அந்தகன்.
பிரசாந்த்துக்கு திருமணம் எப்போது
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, பிரசாந்த்துக்கு திருமணம் எப்போது? என்று கேஎஸ் ரவிக்குமார் கேட்டதற்கு நானும், பிரசாந்தின் அம்மாவும் பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறோம்.. விரைவில் அறிவிப்போம் என்று தியாகராஜன் சொல்லியிருந்தார்.. ஆனால் இதுவரை விவரம் தெரியவில்லை.. ஏற்கனவே ஒரு பாதிப்பில் விழுந்துவிட்டதால், சற்று கவனமாகவே இருப்பார்கள்..
டைரக்டர் ஹரிக்கு முதன்முதலில் படவாய்ப்பை தந்தது பிரசாந்த்தான்.. இப்போது பிரசாந்த்தை வைத்து ஹரி மீண்டும் படம் இயக்குகிறார்.. ஆனால், ஹரி பீக்கில் இருந்தபோதே பிரசாந்ததுக்கு வாய்ப்பு தந்திருக்கலாம்.. சாமி, சிங்கம் போன்ற படங்கள் கிடைத்திருந்தால், பிரசாந்த்துக்கு வெற்றிப்படங்களாக அமைந்திருக்கும்..
விஜயகாந்த்துக்கு பிறகு
அன்றைய காலகட்டத்தில் பிரசாந்த்துக்கென்று தனி செல்வாக்கு இருந்தது.. அவருக்கு மிகப்பெரிய டைரக்டர்கள், பேனர்கள், ஹீரோயின்கள் அமைந்தார்கள்.. அப்படி வேறு எந்த நடிகருக்கும் அமையவில்லை.. சிம்ரன் - பிரசாந்த் ஜோடி பலராலும் ரசிக்கப்பட்டது.
விஜயகாந்த்துக்கு பிறகு லெக்ஃபைட் சிறப்பாக செய்பவர் பிரசாந்த் மட்டுமே.. உடற்பயிற்சி செய்யும்போதே, காலை மிக உயரத்தில் தூக்கி நிறுத்தக்கூடியவர் பிரசாந்த்.. இப்போது பிரசாந்த் அடுத்தடுத்த படங்களில் பிசியாகவே இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications
