மாஸ்டர் படத்தில் சிறுவனாக நடித்த உதய்க்கு இவ்வளவு பெரிய குழந்தையா? மனைவியும் பிரபல நடிகை தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவனாக நடித்த நடிகர் உதய் ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் மகிழ்ச்சியை தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். அதோடு இவர் இத்தனை நாட்களாக திரைப்படங்களில் சின்னப் பையனாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிவிட்டாரா? என்பது பலருடைய வியப்பாக இருக்கிறது.

நடிகர் உதயதீப் 2003 ஆம் ஆண்டு வெளியான ஆயுதம், திருடா திருடி போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருமலை திரைப்படத்திலும் உதயதீப்பிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Actor Uday family photos her publish instagram

திருமலை திரைப்படத்தை பிரபல இயக்குனர் ரமணா இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் உதயதீப் குழந்தை நட்சத்திரமாக சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதாவது விஜய்யோடு அடிக்கடி வந்து பேசும் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். திருமலை படத்திற்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு வெளிவந்த பானா காத்தாடி என்ற திரைப்படத்திலும் அதர்வாவில் நண்பராக உதய் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் கைதி திரைப்படத்திலும் முக்கிய கேரக்டரில் உதய் நடித்திருந்தார்.

இப்படியான நிலையில் தான் மீண்டும் உதய்க்கு விஜய் நடிப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆமாங்க மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் உதய் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் பிரபலமான உதய் குறித்து தகவல் தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது உதய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தான் ட்விட்டரில் இணைந்து இருக்கிறார்.

அப்போது முதல் முறையாக அவருடைய ஸ்டேட்டஸில் விஜய் பற்றி தான் வைத்திருக்கிறார். இதை பார்த்த பலரும் உதய் சின்னப்பையன் தான் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையை இருக்கிறது. உதய் உடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரௌபதி என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தான். அதாவது திரௌபதி திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக ஜனனி கேரக்டரில் நடித்த நடிகையை தான் உதயா திருமணம் செய்து இருக்கிறார்.

Actor Uday family photos her publish instagram

இந்த நிலையில் இப்போது உதய் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி டான்ஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களையும் நடுவர்களையும் மிரள வைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தன்னுடைய மகளோடு எடுத்த புகைப்படத்தை உதயா பகிர அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Actor Uday family photos her publish instagram

அதில் என்னுடைய மகள் பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டு மாதங்கள் ஒரு தூய்மையான ஒரு இனிமையான தருணங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த குட்டி தேவதை என்னுடைய வாழ்வில் கிடைத்ததற்கு நான் அளவற்ற பாக்கியம் செய்திருக்கிறேன். எனது குழந்தைக்கு இரண்டு மாதங்கள் ஆவதால் அவர் கடந்து வந்த ஒவ்வொரு மைல் கல்லையும் நான் பாராட்டுகிறேன். அவருடைய அழகான கண்களை பார்க்கும் போது என்னுடைய இதயம் துடிக்கிறது என்று தன்னுடைய மகள் குறித்து உருக்கமாக உதய் பதிவு வெளியிட்டிருக்கும் நிலையில் இது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+