ராஜ்கிரண் எனக்கு வாழ்க்கை கொடுத்த கடவுள்.. ஆனால், நான் ஒன்னும் ‘சும்மா’ வரல! கோபத்தில் பேசிய வடிவேலு
சென்னை: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் கேங்கர்ஸ் திரைப்படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வடிவேலு நடிகர் ராஜ்கிரண் தனக்கு செய்த உதவி குறித்து எமோஷனலாக பேசியிருந்தார். அதோடு இவர்கள் இருவரும் பிரிந்தது குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
பொதுவாக பலருக்கு உழைப்பும் திறமையும் இருந்தாலும் ஒரு சிலருக்கு தான் அதற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு சிலர் இன்று புகழின் உச்சத்தில் இருந்தாலும் அவர்களுடைய ஆரம்ப காலம் வலிகளும் அவமானங்களும் நிறைந்ததாக தான் இருக்கிறது. அதுபோல ஒருவர் தான் நடிகர் வடிவேலு. ஆரம்பத்தில் பல நடிகர்களுடன் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். செந்தில் கவுண்டமணி காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் 90s காலகட்டத்தில் இவர் இல்லாத படங்கள் இருக்கிறதா என்று கைவிட்டு எண்ணும் அளவிற்கு மாறிவிட்டார். பல முன்னணி நடிகர்களோடு நண்பனாக நடித்து வந்த வடிவேலு பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

மீண்டும் நடிப்பு
சில வருடங்களாக நடிப்பை விட்டு விலகி இருந்த வடிவேலு, இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் அடிக்கடி வடிவேலு பற்றி சர்ச்சைகளும் கிளம்பி வருகிறது. அவரோடு ஒன்றாக நடித்தவர்களே அவர் பற்றி தவறாக பேசி வருகிறார்கள். தன்னை பற்றி தவறாக பேசுபவர்கள் மீது வடிவேலு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
வடிவேலு பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் நீயா நானா கோபிநாத் தான் வடிவேலுவிடம் கேள்வி கேட்கிறார். அப்போது அவர் நடிகர் ராஜ்கிரணுக்கும் உங்களுக்குமான நட்பை பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு நீங்கதான் நான் ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்த பதிலுக்கு சரியான கேள்வியை கேட்டு இருக்கீங்க. இப்போ நான் உண்மையை சொல்லியே ஆகணும் என்று கூறியிருக்கிறார்.
முதல் திரைப்படம்
வடிவேலு ராஜ்கிரணுடன் முதன்முதலாக நடித்த படம் ராசாவின் மனசிலே தான். ஆனால் அதுக்கு முன்பே டி ராஜேந்திரனின் என் தங்கை கல்யாணி படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் அது அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை. முதல் முறை ராஜ்கிரணை தன்னுடைய தம்பியின் நண்பர் மூலமாகத்தான் வடிவேலு சந்தித்தாராம். அப்போது ஒரு நாள் முழுக்க ராஜ்கிரணுடன் வடிவேலு பேசிக்கொண்டே இருந்தாராம்.
ராஜ்கிரண் தான் அடையாளம்
பிறகு ராஜ்கிரண் ஊருக்கு கிளம்பி போயிருக்கிறார். இரண்டு மாதங்கள் கழித்து ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார். அதற்கு பிறகு நான்கு வருடங்கள் ராஜ்கிரண் அலுவலகத்தில் தான் வடிவேலு இருந்தாராம். ராஜ்கிரணின் போன் நம்பர் முகவரியை தான் ஆடிஷன் போகும் எல்லா இடங்களிலும் கொடுத்து இருக்கிறார்.
தேவர் மகன் சம்பவம்
வடிவேலுக்கு ராஜ்கிரண் தான் இருப்பிடம் கொடுத்திருக்கிறார். என் ராசாவின் மனசிலே திரைப்படத்திற்கு பிறகு ஆர்.வி உதயகுமாரிடம் தொடர்ந்து பத்து படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் சின்ன கவுண்டர், தேவர் மகன், கிழக்கு சீமையிலே போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் ஒரு திருப்பத்தை கொடுத்தது தேவர் மகன் திரைப்படம் தானாம்.
பிரிவிற்கான காரணம்
அதுவரைக்கும் ராஜ்கிரண் அலுவலகத்தில் தான் வடிவேலு தங்கி இருந்திருக்கிறார். ஆனால் தனக்கு ராஜ்கிரண் சம்பளம் எதுவும் கொடுக்கவில்லை, கூடவே இருந்து பார்த்துக் கொண்டார் அதிலிருந்து நான் ராஜ்கிரணிடம் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் கிளம்பி வந்தேன். ஆனால் ஊரில் இருந்து வரும்போது நான் வேட்டி சட்டையோடு தான் வந்தேன், அம்மணமாக வரவில்லை. ஆனால் சிலர் பேசும் போது வேட்டி, சட்டை வாங்கி கொடுத்தாரு தாலாட்டுனாரு, ஊட்டுனாரு என்று எல்லாம் சொல்றாங்க. அப்படி கிடையாது.
ராஜ்கிரண் பற்றி விளக்கம்
ராஜ்கிரண் சார் தான் எனக்கு கடவுள். அவர்தான் எனக்கு அச்சாரம் போட்டார். ஆனால் அதற்குப் பிறகு நான் இப்போ இவ்வளவு வளர்ந்து வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய முயற்சியும் இருக்கிறது. நான் இன்று சுந்தர் சி வரைக்கும் பல இயக்குனரை பார்த்து விட்டேன் ஆனால் நான் நன்றி மறக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications