மதுரையிலிருந்து நான் துணி போடாம வரல.. சின்ன கவுண்டர் வாய்ப்பு.. அந்த நடிகர் இறப்புக்கு ஏன் போகல? வடிவேலு விளக்கம்
சென்னை: நடிகர் வடிவேலு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். நடிகர் விஜயகாந்த், விவேக் போன்ற அவருடைய இறப்பில் கூட வடிவேலு கலந்து கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அதற்கு பதில் சொல்லி இருக்கிறார். அதுபோல சினிமாவில் தனக்கு யார் உதவினார்கள் தனக்கு சின்ன கவுண்டர் திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்றும் பேசி இருக்கிறார்.
நடிகர் வடிவேலு என்னதான் காமெடி நடிகராக பலருக்கும் தெரிந்திருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் உடன் இவருக்கு நேரடியாக மோதல் ஏற்பட்டது அதற்குப் பிறகு இருவரும் ஒன்றாக நடிப்பதை தவிர்த்து வந்தனர். விஜயகாந்த் குறித்து பல இடங்களில் வடிவேலு பேசி இருந்தார்.

விஜயகாந்த் செய்த உதவி
ஆனால் விஜயகாந்த் வடிவேலு பொழப்புக்காக ஏதோ ஒரு இடத்தில் சேர்ந்து இருக்கிறார். அதனால் என்ன வேணாலும் பேசிட்டு போகட்டும் விட்டு விடுங்கள் என்று தன்னுடைய நண்பர்களிடம் சொன்னதாக விஜயகாந்த் நண்பர்கள் பலர் பேசியிருந்தனர். அதேபோல விஜயகாந்த் நண்பர் ஒருவர் சமீபத்தில் பேசும்போது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் வடிவேலு நடிக்கும் போது அவருக்கு மாற்று துணி கூட இல்லாமல் இருந்தார். விஜயகாந்த் சொல்லி நான் தான் அவருக்கு 5 வேஷ்டி சட்டை எடுத்துக் கொடுத்தேன் என்று பேசியிருந்தார். இதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது.
வடிவேலு பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடிவேலு பேசி இருக்கிறார். அதாவது வடிவேலுவிடம் உங்களுக்கும் ராஜ்கிரணுக்கும் உள்ள உறவு பற்றி சொல்லுங்கள் என்று கேட்டபோது நான் பல உண்மைகளை சொல்ல வேண்டியது இருக்கு. நீங்க சரியான நேரத்தில் இந்த கேள்விகளை கேட்டு இருக்கீங்க என்று தன்னுடைய பேச்சை தொடங்கி இருந்தார்.
ராஜ்கிரண் கொடுத்த வாய்ப்பு
ராஜ்கிரண் ஒருமுறை ஊருக்கு திருமண விழாவில் பங்கேற்பதற்காக கிராமத்துக்கு வந்திருந்தார். அப்போது தமிழ்நாடு ஹோட்டலில் தங்கி இருந்த ராஜ்கிரணை என்னுடைய தம்பியின் நண்பர் மூலமாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் முழுக்க அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு ராஜ்கிரண் ஊருக்கு கிளம்பி போய்விட்டார். இரண்டு மாதம் கழித்து எனக்கு ராசாவின் மனதிலே படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார்.
ராஜ்கிரண் செய்த உதவி
அந்த திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளாக என்னை வாழ வைத்தது ராஜ்கிரண் தான். அவருடைய அலுவலகத்திலேயே நான் தங்கி இருந்தேன். அவருடைய போன் நம்பர் அட்ரஸை தான் நான் ஆடிஷன் போகும் எல்லா இடத்திலும் கொடுத்திருந்தேன். இப்படித்தான் எங்களுடைய உறவு உருவாகி இருந்தது. ராசாவின் மனசிலே திரைப்படத்திற்கு பிறகு எனக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்தது. அதற்கு காரணம் ராஜ்கிரண் தான்.
திரைப்பட வாய்ப்பு
சின்ன கவுண்டர், பொண்ணுமணி, ராஜகுமாரன் என பத்து படங்களில் ஆர்வி உதயகுமாரிடம் நடித்துக் கொண்டிருந்தேன். அதை தொடர்ந்து காதலன், கிழக்கு சீமையிலே, தேவர்மகன் என பல படங்களில் நடித்திருந்தேன். தேவர்மகன் படம் நடிக்கிற வரைக்கும் ராஜ்கிரண் சார் அலுவலகத்தில் தான் தங்கி இருந்தேன். அவரிடமிருந்து எனக்கு எதுவும் சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் நான் அவரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகிக் கொள்கிறேன் என்று வெளியே கிளம்பி வந்தேன்.
பதிலடி
ராஜ்கிரண் தான் எனக்கு கடவுள். அவர்தான் எனக்கு அச்சாரம் போட்டார். அதற்கு பிறகு நான் இவ்வளவு வளர்ந்து வருகிறேன் என்றால் என்னுடைய முயற்சியும் இருக்கிறது. நான் ஊரில் இருந்து வரும்போது வேட்டி சட்டையோடு தான் வந்தேன். அம்மணமாக வரவில்லை ஆனால் சிலர் பேசும்போது வேட்டி சட்டை, டவுசர் வாங்கி கொடுத்தாரு, தாலாட்டுனாரு, ஊட்டுனாரு என்றெல்லாம் சொல்லுறாங்க, அப்படி கிடையாது.

இறுதி சடங்கு பிரச்சனை
அதுபோல விவேக் இறப்புக்கு நான் போகலன்னு கூட சிலர் பேசுறாங்க நான் விவேக் சாரின் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவியிடம் வருத்தம் தெரிவித்து விட்டு தான் வந்தேன். இது எல்லாம் வெளியே தெரியாது. ஆனால் சிலர் வாய் இருக்கிறது என்பதற்காக என்ன வேணாலும் பேசிக்கொண்டு திரிகிறாங்க என்று வடிவேலு பேசி இருக்கிறார்.
நெகட்டிவ் இமேஜ்
சமீப காலமாக வடிவேல் உடைய திரைப்படங்கள் அதிகமாக வெற்றி அடையாமல் இருப்பதற்கு காரணம் அவர் பற்றிய நெகடிவ் இமேஜ் தான். தன்னை பற்றிய நெகட்டிவ் இமேஜை போக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய திரைப்படம் வெளியாகும் நேரத்தில் வடிவேலு இதுபோன்று பேசி இருக்கிறார். ஆனாலும் அவரை சமூக வலைத்தளத்தில் விஜயகாந்தின் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
