மணிவண்ணன் இறப்பிற்கு “இது” கூட காரணமா? மனம் திறந்த நடிகர் வாகை சந்திரசேகர்.. யாரும் இதை செய்யாதீங்க
சென்னை: நடிகர் மணிவண்ணன் திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும், தமிழ் அறிவாளராகவும் பலருக்கும் பரீட்சையமானவர்தான்.
அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 15 தேதி மரணம் அடைந்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் மணிவண்ணனின் குணம் மற்றும் அவருடைய மறைவு குறித்து நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு தான் பல திறமைகள் ஒருசேர அமைந்திருக்கும். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் மணிவண்ணன். இவர் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் 50 திரைப்படங்களை இயக்கியும் இருந்தார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய கோயம்புத்தூர் பாஷையில் நக்கலும் நையாண்டித்தனமாகவும் அரசியலை பற்றி கிடைக்கும் இடங்களில் எல்லாம் புட்டு புட்டு வைத்து விடுவார்.
அதுமட்டுமல்லாமல் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை எல்லாம் அப்படியே சினிமாவில் வசனங்களாக மாற்றி விடுவது இவருடைய தனித்திறமை. அதோடு மார்க்சிய சித்தாந்தம், தமிழ் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவை அதிகமான ஈடுபாடு கொண்டு இருந்த மணிவண்ணன் அதற்காக பல போராட்டங்களிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் மணிவண்ணன் ஸ்கூல் முடித்து காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் சத்யராஜோடு நண்பராக மாறி இருக்கிறார். அப்போது ஆங்கிலத்தில் பட்டம் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சேக்ஸ்பியரின் பாடங்கள் படிப்பதற்கு மணிவண்ணனுக்கு அதிகமாக கஷ்டமாக இருந்திருக்கிறது. அதனாலே மேடையில் ஷேக்ஸ்பியர் நாடகம் நடிக்கும் போது கல்லூரி மாணவர்கள் மணிவண்ணனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
அதனால் மணிவண்ணன் படிப்பை பாதியிலேயே முடித்து விட்டாராம். ஆனாலும் தான் அவமானப்பட்டது மனதில் இருந்து அழிக்க முடியாமல் மணிவண்ணன் கஷ்டத்தில் இருந்திருக்கிறார். அப்போது கிழக்கே போகும் ரயில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த திரைப்படம் இவருக்குள் ஒரு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் பாரதிராஜாவுக்கு மணிவண்ணன் கடிதம் எழுதி இருக்கிறார். அதுவும் ஒன்றல்ல ரெண்டு அல்ல 100 பக்கங்களுக்கு கடிதம் எழுதினாராம்.
பிறகு பாரதிராஜா மணிவண்ணனை தன்னுடைய உதவியாளராக ஏற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார். கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் அவருக்கு உதவியாளராக சேர்ந்திருக்கிறார். பிறகு அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் மணிவண்ணன் எழுதியிருக்கிறாராம்.

அதிலும் நிழல்கள், டிக் டிக் ,அலைகள் ஓய்வதில்லை போன்ற ஏராளமான திரைப்படங்களுக்கு பாரதிராஜாவின் உதவியாளராக மணிவண்ணன் இருந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து இயக்குனராக மாறிய மணிவண்ணன் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் இயக்கியிருக்கிறார். அதில் 34 திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
நடிகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்த மணிவண்ணன் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். அவர் மறைந்திருந்தாலும் அவருடைய நடிப்பு வசனங்கள் இப்போதும் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் வாகை சந்திரசேகர் மணிவண்ணன் பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதாவது மணிவண்ணன் மாண்புள்ளவன், திறமையானவன், வெற்றிகளை மட்டுமே ருசித்து வந்தவன். ஆனால் திடீரென்று மது பழக்கத்திற்கு ஆளானார். சாதாரணமாக குடி என்பது ஒரு மனிதனின் கஷ்டங்களை மறப்பதற்கும், மனம் நிம்மதி அடைவதற்கும்தான் உதவும் என்பார்கள். ஆனால் மணிவண்ணன் விஷயத்தில் அது வேறு விதமாக இருந்தது.

மணிவண்ணன் மது அருந்திவிட்டு காரல் மார்க்ஸ் போன்றோர்களின் நாவல்களை படிப்பாராம். பெரிய பெரிய நாவல்கள் புதினங்கள் இவற்றை மிக உன்னிப்பாக படித்து தெரிந்து கொள்வாராம். அது தான் அவருடைய உடல்நிலை அதிகமாக பாதிக்கப்பட்டதற்கு கூட காரணமாக இருக்கலாம் என்று வாகை சந்திரசேகர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications