நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல நடிகை தெரியுமா? கிரிக்கெட் விளையாட்டில் வெளியான காதல்
சென்னை: நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி மூன்று தலைமுறையாக தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருடைய குடும்ப வாழ்க்கை பற்றி பல தகவல்களை பார்க்கலாம்.
நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி ஒரு பிரபல நடிகை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

அதுபோல நடிகர் வெண்ணிறாடை மூர்த்திக்கும் அவருடைய மனைவிக்கும் காதல் மற்றும் திருமணம் நடந்தது சுவாரசியமான கதை தான். அதை விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சினிமாவில் இன்றைக்கு பல நடிகர்களும் ஒரு சில படங்களில் நடித்து பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஏறக்குறைய மூன்று தலைமுறைக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரை உலகில் தனக்கென்று தனி அடையாளத்தை பதித்தவர் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையின் மூலமாகவும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறார். எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் நடிகர்களோடும் வெண்ணிறாடை மூர்த்தி நடித்திருக்கிறார். சொல்லப்போனால் இவர்களுடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அதிலும் அந்த காலத்தில் காமெடி நடிகராக வலம் வந்து பல திரைப்படங்களின் வில்லனாகவும் இவர் அசத்தியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் வெண்ணிறாடை மூர்த்தி பேசும் வசனங்கள் அதிகமான இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். ஆனாலும் இதையும் அதிகமான ரசிகர்கள் ரசிக்க தான் செய்கிறார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய வசனத்தையும் காமெடியோடு சேர்ந்து கலக்கி பலரையும் கவர வைத்து விடுகிறார்.

அதே நேரத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி கதாநாயகி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை மணிமாலா தான். இவர்கள் இருவரும் சந்தித்தது பலமுறை என்றாலும் காதல் இவர்களுக்குள் ஏற்பட்டது கிரிக்கெட் விளையாட்டின் போது தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.
60, 70களில் பிரபலமாக இருந்த நடிகை மணிமாலாவை வெண்ணிற ஆடை மூர்த்தி பலமுறை சந்தித்திருக்கிறாராம். ஆனால் அந்த காலகட்டத்தில் மணிமாலா முன்னணி நடிகையாக இருந்திருக்கிறார். ஆனாலும் அடக்கத்தோடும் பணிவுடன் அவர் இருப்பதை பார்த்து மணிமாலா மீது வெண்ணிற ஆடை மூர்த்திக்கு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது இந்தப் பெண் நமக்கு வாழ்க்கை துணையாக வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த வெண்ணிறாடை மூர்த்தி அதை சொல்லாமல் மனதுக்குள்ளயே வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக ஒன்றாக பழகி இருக்கிறார்கள். அப்போது மணிமாலாவிற்கும் இவர் மீது காதல் இருந்திருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கிறது. அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் நடிகை மணிமாலாவும் வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போதுதான் மணிமாலா மற்றும் வெண்ணிறாடை மூர்த்தி இருவருக்கும் அருகருகே உள்ள அறையில் தங்கி இருந்திருக்கிறார்கள். இருவரும் பல மணி நேரம் மனம் விட்டு பேசியதாகவும் அப்போது இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தியதாகவும் தெரிகிறது.

பிறகு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மணிமாலா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு நடிப்பை விட்டு விட்டு தன்னுடைய மகன் மனோவை பார்த்துக் கொள்வதில் நேரத்தை செலவிட தொடங்கி விட்டார். தற்போது அவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
அந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பதற்காக மணிமாலாவிடம் கேட்ட போது அவரும் சரி என்று சொல்லி அந்த திரைப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் நடிகை சுகாசினி நடித்த சிந்து பைரவி திரைப்படத்திலும் சுகாசினியின் அம்மா கேரக்டரில் இவர் நடித்திருப்பார். இப்போது நடிகை மணிமாலாவும் நடிகர் வெண்ணிறாடை மூர்த்தியும் நடிப்பை விட்டு விட்டு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications