ரோபோ சங்கர் இறப்பில் சர்ச்சை.. அவர் மனைவி செய்ததை எதிர்பார்க்கல! நடிகர் விதார்த் உருக்கம்
சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நகைச்சுவை மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த நடிகர் ரோபோ ஷங்கர் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மரணத்தைச் சுற்றியும், இறுதிக் கிரியைகளின் போதும் நடந்த சில நிகழ்வுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, அவரது மனைவி பிரியங்கா ரோபோ சங்கரின் இறுதிச் சடங்கில் நடனமாடி அஞ்சலி செலுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்தச் சூழலில், மறைந்த ரோபோ ஷங்கரின் நண்பரும், நடிகருமான விதார்த், ஒரு பேட்டியில் இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தேவையில்லாத வதந்திகள் மற்றும் விமர்சனங்களைப் பற்றி அவர் முன்வைத்த கருத்துக்கள் திரையுலகில் கவனம் பெற்றுள்ளன.

நடிகர் விதார்த் யார்
நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் யதார்த்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். குறிப்பாக, 'மைனா' திரைப்படம் மூலம் மிகப் பெரிய புகழைப் பெற்றார். எளிய கிராமத்து இளைஞன், உணர்வுப்பூர்வமான காதலன் போன்ற வேடங்களில் அசத்தும் இவர், 'குறைந்த பட்ஜெட்', 'நல்ல கதை' என்ற கொள்கையில் பயணிக்கும் திறமையான நடிகர். இவர் எப்போதும் சர்ச்சைகளில் சிக்காமல், சினிமா சார்ந்த விஷயங்களில் மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.
ரோபோ ஷங்கரின் மரண வதந்திகள்
ரோபோ ஷங்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே, சமூக வலைதளங்களில் அவர் குறித்துப் பல வதந்திகள் பரவின. அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய போதும், இப்போது மறைவுக்குப் பின்னரும் அவர் குடிப் பழக்கத்தால் தான் உயிரிழந்தார் என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது குறித்துப் பேசிய விதார்த், "ரோபோ ஷங்கர் இறந்ததும் அவர் பற்றிப் பல சர்ச்சைகள் வந்தது. அவர் இதற்கு முன்பு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த சமயத்திலேயே நிறைய வதந்திகள் பரவியது. அவர் சிகிச்சையில் இருந்து திரும்பி வீட்டுக்கு வந்ததும் நான் அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்தேன். அப்போது அவர் என்னிடம், 'நான் செத்துப் பொழச்சு வந்தேன். என்னுடைய மனைவி சாவித்திரி.. என்னைக் காப்பாற்றி கூட்டிட்டு வந்திருக்கா' என்று ரொம்ப பெருமையா சொல்லிட்டு இருந்தார்.
இப்போ அவருடைய இறப்பில் பல விமர்சனங்கள் வைக்கிறாங்க. எல்லாரும் ஒருநாள் இந்த உலகத்தை விட்டுப் போய்த்தான் ஆகணும். இவர்கள் கண்டமேனிக்குப் பேசுவதால், போனவர்கள் திரும்பி வரப் போவது கிடையாது. அதனால், தேவையில்லாத சர்ச்சைகளையும், பேச்சுகளையும் குறைத்துக் கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்," என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
காதலின் ஆழமான வெளிப்பாடு
ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, கணவரின் இறுதிச் சடங்கில் நடனமாடி அஞ்சலி செலுத்தியது பெரும் பேசுபொருளானது. இதனை விதார்த் முற்றிலும் வேறு கோணத்தில் அணுகியுள்ளார்.
"ரோபோ ஷங்கர் மனைவி டான்ஸ் ஆடியது கூடப் பெரியதாகப் பேசப்பட்டது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். தன் கணவர் மீது வைத்திருந்த காதலை, பாசத்தை வெளிப்படுத்துகிறார். அதை நாம் ஏன், 'இப்படி செய்தார்' என்று கேட்கக் கூடாது. ஒவ்வொருவருடைய துக்கத்தை வெளிப்படுத்தும் விதமும் மாறுபடும். அதைப் பற்றி விமர்சிக்க நமக்கு உரிமையில்லை," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இறுதிச் சடங்கில் தான் பிரியங்காவை பார்த்தபோது, "அவங்களால இந்த இழப்பைத் தாங்கிக்கவே முடியல" என்று விதார்த் உருக்கமாகக் கூறினார். "நான் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது அவருடைய மனைவியைப் பார்த்துப் பயந்துட்டேன். அவங்க ரொம்பப் புலம்பிக்கிட்டே இருந்தாங்க. அவர் மீது வைத்திருந்த அதீத அன்புதான், அவர் டான்ஸ் ஆடியதற்குக் காரணம்" என்று விதார்த், பிரியங்கா மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.
மொத்தத்தில், ஒரு கலைஞனின் மரணத்தை மரியாதையுடன் அணுக வேண்டும் என்றும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் நடிகர் விதார்த் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications