நதியா அந்த வார்த்தை சொல்லும்போது.. 400 ரூபாய் தான் சம்பளம்.. விஜய் சேதுபதி பளிச்
சென்னை: வெள்ளித்திரை, சின்னத்திரை என்று கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தான் முதல் முறையாக பார்த்த ஹீரோ ஜெயம் ரவி தான் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
பலருக்கும் சரியான திறமையும் உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் மட்டும் அமைவதில்லை. ஒரு சிலருக்கு மட்டும்தான் பல போராட்டங்களுக்குப் பிறகு தங்களுடைய திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த விஜய் சேதுபதி இப்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் சீரியல் மற்றும் திரைப்படங்களில் பத்தோடு ஒன்றாக நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என்று பல முன்னணி நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய வளர்ச்சி அபரிமிதமாக இருந்தாலும் அவருடைய திறமையையும் அதற்கு தகுந்த மாதிரி தான் இருக்கிறது. ஆனாலும் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து விஜய் சேதுபதி எந்த இடத்திலும் மறக்கவில்லை.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களிடமும் இயல்பாக பழகும் விஜய் சேதுபதி தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் விஜய் சேதுபதி பேசுகையில் நான் நடித்த முதல் படத்தில் 200 ரூபாய் சம்பளம் தந்தாங்க. அதற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் s/o மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன்.
1 கோடி கொடுத்தாலும் அதை நான் பண்ண மாட்டேன்.. நினைச்சாலே பயமாயிருக்கு! ஆனால் என் மகன்! வனிதா எமோஷனல்
அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு 400 ரூபாய் சம்பளம் தந்தாங்க. எனக்கு அது மிகப்பெரிய இன்கிரிமெனட் மாதிரி தெரிந்தது. அதிலும் அந்த படத்தில் நடிக்கும் போது நீங்க ஜிம்பாய் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று சொல்வது ஏதோ நமக்கு ஒரு பெரிய கேரக்டர் கிடைக்கப்போகுது என்று நான் நினைத்திருந்தேன். அந்த படத்தில் நதியா மேடம் ஒரு இடத்தில் எனக்கு சிங்க குட்டி மாதிரி ஒரு மகன் இருக்கான்டா என்று சொல்லுவாங்க. அதுதான் ஜெயம் ரவி அறிமுகமாகும் காட்சியாக இருக்கும்.
அந்த இடத்தில் நான் நதியா மேடத்திற்கு பின்பக்கத்தில் இரண்டாவது இடத்தில் நின்று கொண்டிருந்தேன். நான் என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக பார்த்த ஹீரோ என்றால் ஜெயம் ரவி தான். அவருடைய திரைப்படங்கள் எனக்கு அவ்வளவு பிடிக்கும் என்று அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி நான் உண்மையில் பல வருடங்களாக என்னுடைய மனதில் இருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.
எனக்கு முன்பு விஜய் சேதுபதி பேசும்போது என்னைப் பற்றி அவர் பேசியதால் நான் அவரைப் பற்றி பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். விஜய் சேதுபதி பேசும்போது நான் அவர் பார்த்த முதல் ஹீரோ நான் என்று சொன்னார். ஆனால் நான் முதன்முதலாக டைரக்ஷன் பண்ணும் படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி தான் நடிக்க வைக்க வேண்டும் என்று நான் அவருடைய படத்தை பார்த்து பலமுறை நினைத்திருக்கிறேன்.
ஏனென்றால் விஜய் சேதுபதி என்னுடைய படத்தில் நடித்தார் என்றால் எனக்கு அந்த படத்தில் பெரிய வேலையை இருக்காது. எல்லா வேலையையும் விஜய் சேதுபதியே பார்த்துவிடுவார் என்று ஜெயம் ரவியும் விஜய் சேதுபதி குறித்து பாராட்டு மழையை பொழிந்து இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications