விஜய் சேதுபதி நடித்த சீரியல் எது தெரியுமா? அதில் பட்ட அவமானமும், அனுபவமும்.. மனுஷன் கண் கலங்கிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பெரிய அளவில் அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தொடர்ச்சியாக பல இன்டர்வியூகளில் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அதில் தான் சீரியலில் நடிக்கும் போது கிடைத்த அனுபவம் குறித்தும் வெளிப்படையாக விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

பொதுவாக ஒரு சில நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தாலும் பிறகு புகழின் உச்சத்தில் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு வளர்ந்து விடுகிறார்கள். ஆனாலும் ஆரம்ப காலகட்டத்தில் தாங்கள் பட்ட கஷ்டங்களை மறக்காத நடிகர்கள் அது குறித்து பல தகவல்களை வெளியே சொல்லும் போது தான் இவர்களே இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்களா என்று பலருக்கும் தெரியவரும்.

அதுபோல ஒரு சில நடிகர்கள் நாங்கள் இந்த சீரியலில் நடித்தோம், அந்த திரைப்படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தோம் என்று சொல்லும் போதுதான் பலருக்கே தெரிய வருகிறது. இது அவரா என்று பலரும் வியப்புடன் கேள்விகளை எழுப்புகிறார்கள். அந்த மாதிரி தான் நடிகர் விஜய் சேதுபதி இன்று புகழின் உச்சத்தில் இருந்தாலும் அவருடைய ஆரம்பகாலம் அவ்வளவு எளிமையானதாக இருந்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் கல்லூரி படிப்பை முடித்ததும் வீட்டு சூழ்நிலைக்காக வெளிநாட்டு வேலைக்கு போய்விட வேண்டும் என்று அதற்கு முயற்சி செய்த விஜய் சேதுபதிக்கு பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் துபாயில் அக்கவுண்ட்ஸ் வேலை கிடைத்திருக்கிறது அங்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் தன்னுடைய வாழ்க்கை இவ்வளவு தான் என்று வாழ்ந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி அதற்குப் பிறகு மீண்டும் தன்னுடைய சொந்த ஊரான ராஜபாளையத்திற்க்கு திரும்பி வந்த நிலையில், நடிக்க வேண்டும் என்று அதற்காக பல முயற்சிகளை எடுத்து பல அவமானங்களை பட்டு அதையே அனுபவமாக மாற்றி இன்று டாப் ஹீரோகளுக்கு வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்ப வரைக்கும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் விஜய் சேதுபதி பேசுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு சீரியலில் நடித்தேன். அது பலருக்கும் தெரிந்திருக்குமா? அல்லது இப்போது நினைவிருக்குமா? என்று கூட எனக்கு தெரியாது. அதாவது அந்த சீரியலின் பெயர் "பெண்". அந்த சீரியலில் நடிகை சீதா, ரேவதி, டெல்லி கணேஷ் போன்ற பலர் நடித்திருந்தார்கள். அந்த சீரியல் சன் டிவியில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.

பிறகு நவம்பர் மாதத்தில் சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீரியலில் நடிக்கும்போது எனக்கு பெரிய அளவில் எக்ஸ்பிரஷன் காட்ட தெரியாது. அதனால் உதவி இயக்குனர்கள் என்னை திட்டுவார்கள். நானே அந்த நேரத்தில் ஒரு பயம் கலந்த நடிப்போடு தான் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் இயக்குனர் எனக்காக அவர்களை திட்டுவார்.

அவனே பயந்து பயந்து நடித்துக் கொண்டிருக்கிறான். அவனை போய் நீங்க திட்டாதீங்க, அவனுக்கு எப்படி நடிக்கணும்னு சொல்லிக் கொடுங்க என்று இயக்குனர் சொல்லுவார். அதோடு என்னிடம் நீ சீதா மேடம் நடிப்பை கொஞ்சம் கவனி அவங்க கண்களில் நடிப்பை எப்படி காட்டுறாங்க. முகத்தில் அந்த நடிப்புடைய எக்ஸ்பிரஷனை எப்படி காட்றாங்க என்று கவனி. அதுதான் உனக்கு சரியான பாடமாக இருக்கும் என்று சொன்னார்.

அதற்கு பிறகு நான் சீதா மேடம் மற்றும் டெல்லி கணேஷ் போன்றவர்களுடைய நடிப்பை உன்னிப்பாக கவனிப்பேன். அதற்குப் பிறகுதான் நாம எவ்வளவு கேவலமாக நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று எனக்கு தெரிய வந்தது. அப்போது கூட இயக்குனர் என்னிடம் உன்னுடைய கண்களும் முகமும் அழகாக இருக்கிறது. அதை நீ சரியாக பயன்படுத்தினால் நீ டாப் ஹீரோவாக மாறுவாய் என்று சொல்லுவார்.

அன்னைக்கு நான் இப்போ இருக்கிற இந்த நிலைமைக்கு வருவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அந்த சீரியலில் நடிக்கும்போது என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் போகும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பல இடங்களில் நான் அவமானப்பட்டு இருக்கிறேன். அந்த நேரத்தில் என்னையே நான் திட்டிக்கொண்டு அழுது கொண்டிருக்கிறேன். நானும் மனுஷன் தானே? நானும் மற்றவர்களைப் போலத்தான்.. ஏன் நமக்கு மட்டும் இது நடக்கவில்லை?

ஏன் நமக்கு மட்டும் ஏமாற்றம் நடக்கிறது என்றெல்லாம் பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த குழப்பங்களும் சிந்தனைகளும் தேவையில்லாதது என்று நான் புரிந்து கொண்டேன். இப்போது வாழ்க்கை எப்படி போகிறதோ அதுபோக்கில் நாம் போய்விட வேண்டும் என்று முடிவெடுத்து தான் என்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+