வெளிப்படையாக பேசும் விஜய் சேதுபதிக்கு இவ்ளோ வேதனையா?அப்பா கேட்ட கடைசி கேள்வி! நொறுங்கிய மனசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் கலந்து கொண்ட போது தன்னுடைய அப்பா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதுவரைக்கும் சிரித்த முகமாக எப்போதும் வெளிப்படையாக பேசும் விஜய் சேதுபதியின் வாழ்க்கையில் இத்தனை வேதனைகள் இருக்கிறதா என்று அவருடைய பேட்டியை கேட்கின்ற நபர்களை வருத்தமடைய வைத்திருக்கிறார்.

பொதுவாக ஒரு சிலர் வெளியே சிரித்த முகமாக எப்போதும் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது எல்லோருமே இவர்களுக்கு என்ன கவலை இருந்திட போகுது என்ற சிந்தனை தான் வரும். ஆனால் அவர்களுக்குள் தான் பல கஷ்டங்களும் போராட்டங்களும் இருக்கும். ஆனால் அவர்கள் அதை எந்த இடத்திலும் வெளியே காட்டிக் கொள்வது கிடையாது. அதுபோல்தான் நடிகர் விஜய் சேதுபதியின் வாழ்க்கையிடம் நடந்து இருக்கிறது.

Television Sun TV Vijay Sethupathi Entertainment

விஜய் சேதுபதி எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சரி, அல்லது திரைப்படங்களில் கலந்து கொண்டாலும் சரி எப்போதும் மனதில் இருப்பதை டக்கு டக்கென்று பேசிவிடுவார். இதனாலையே இவருக்கு மக்கள் செல்வன் என்ற பெயரும் உண்டு. அதுபோல ரசிகர்களும் விஜய் சேதுபதியின் மோட்டிவேஷனை அதிகமாக விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் தனியார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் விஜய் சேதுபதியை கோபிநாத் தான் கேள்வி கேட்டு பேட்டி எடுக்கிறார். அப்போது தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நபர்கள் என்று விஜய் சேதுபதி பேசிக் கொண்டிருக்கும் தன்னுடைய அப்பாவை குறித்தும் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், என்னுடைய வீட்டில் நாங்கள் நான்கு பிள்ளைகள். ஆனால் அப்பா என்னிடம் ரொம்பவே கிளோஸா இருப்பாரு.

வீட்டில் நான்கு பேருக்கும் பாரபட்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டாலும் நான் அப்பாவிடம் ரொம்ப ஃப்ரெண்ட்லியா தான் பேசுவேன். ஆனால் என்னுடைய அப்பாவிற்கு பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியாது. அதனால நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம். ஆனாலும் எங்களுடைய வாழ்க்கையில் அவர் எந்த விஷயத்திலும் தடை போட்டது கிடையாது. நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னால் கூட சரி என்று சொல்லிவிடுவார்.

அதுபோலத்தான் என்னுடைய வாழ்க்கையை நான் தேர்ந்தெடுத்த போது அவர் மறுப்பு சொல்லவில்லை. ஆனால் அவர் இறந்து போவதற்கு முன்பு ஒரு படத்தில் நான் நடித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் 2019 ஆம் வருடம் இறந்து போனார். அந்த நேரத்தில் நான் ஒரு ஷார்ட் பிலிம் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது இரவு 12 மணிக்கு எனக்கு போன் வந்தது உடனே நான் வீட்டிற்கு போய் பார்த்தேன். அப்பாவுடைய உடம்பெல்லாம் சில்லென்று இருந்தது.

அந்த நேரத்தில் நான் பேசுறது உனக்கு கேக்குதான்னு தெரியல என்று எதையோ முணுமுணுத்துக் கொண்டு இருந்தார். காலையில் இறந்து போயிட்டாருன்னு சொன்னாங்க. அவர் நல்லா இருக்கும்போது நான் நல்லா வரணும்னு சொல்லுவாரு. நான் எப்போதெல்லாம் சோகமா வருத்தத்தில் இருக்கேனோ அப்போ எல்லாம், உன்னை பத்தி உனக்கே தெரியாது. உனக்குள்ள என்ன திறமை இருக்கிறதென்று எனக்கு தெரியும் என்று சொல்லுவாரு.

அவர் இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி நான் அவரிடம் நான் முதன்முதலில் நடித்த படத்தின் போட்டோவை காட்டினேன். அவர் சந்தோஷப்பட்டாரு. அப்ப கூட நான் சாகறதுக்குள்ள உன்னோட படம் வெளிவந்துருமான்னு கேட்டாரு. நான் அப்போ, உனக்கு என்ன அவ்ளோ அவசரம்? நான் நல்லா இருக்கிறதை பார்க்காம உன்ன போக விட மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் நடந்ததே வேறு.. அவர் இறந்த அடுத்த வாரம் என்னுடைய படம் வெளியானது.

இப்போதும் நான் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்து கொண்டாலும் அப்பாவிடம் சொன்னது போல ஒரு திருப்தி எனக்கு ஏற்படவே இல்லை. அப்பாவுக்கு கமல் ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் கமல் சாரோடு நடித்ததை அவரால் பார்க்க முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் என் மனசுக்குள்ள ரொம்பவே இருந்திட்டு இருக்கு என்று அந்த பேட்டியில் தன்னுடைய தந்தை குறித்து உருக்கமாக விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+