விஜயகாந்த் உடலில் அந்த இடத்தில் எலும்பே இல்லை... மகன் கூறிய தகவல்.. ரசிகர்கள் கூறும் ஆறுதல்கள்
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பட்ட சினிமா ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பின் மூலமாக கவர்ந்திருக்கிறார்.
நடிகராக மட்டுமல்லாமல் ஒரு தலை சிறந்த அரசியல் தலைவராகவும் விஜயகாந்த் இருந்து வந்துள்ளார். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிப்பில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் அவரை பற்றி அவருடைய மகன் பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் மட்டுமே நடிப்பு
மதுரையில் பிறந்த விஜயகாந்த் நடிப்பின் மீது தனக்கு இருந்த ஆசையின் காரணமாக பல போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். விஜயகாந்தின் முதல் திரைப்படம் இனிக்கும் இனிமை என்பதாம், அதற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த ஒரு சில நடிகரின் விஜயகாந்த் ஒருவர். ஆனாலும் இவர் நடித்த பல திரைப்படங்கள் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிக்கும் திரைப்படங்களில் அதிகமாக இவர் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தாலும், 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவருடைய ஃபைட் சீன்கள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக கவர்ந்து விடும்.

செய்த உதவியை விளம்பரப்படுத்தியது இல்லை
பல திறை பிரபலங்களும் பாராட்டும் ஒரு நடிகராக விஜயகாந்த் இருந்து வருகிறார். தயாரிப்பாளர்களிடம் இவர் கராராக பண விஷயத்தில் நடந்து கொள்ளவே மாட்டாராம் .பல திரைப்படங்களில் நடித்து முடித்து படம் வெளியான பிறகு தான் இவர் சில நேரங்களில் பணம் வாங்கி இருக்கிறாராம்ய சில கஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களிடம் இவர் பணம் வாங்காமலும் இருந்திருக்கிறாராம். ஆனால் அதை எந்த நேரத்திலும் வெளியே சொல்லி தனக்குத்தானே விளம்பரம் தேடிக் கொண்டது கிடையாதாம் அதனால் பல தயாரிப்பாளர்கள் இவரை பற்றி பெருமையாக பேசி வருகின்றனர்.

அடிக்கடி உடம்பில் காயம்
நடிப்பின் மீது தீராத காதலில் இருந்த விஜயகாந்த் ஆரம்பக் காலகட்டத்தில் மூன்று வேலை கூட நடிப்புக்காக வேலை செய்திருக்கிறாராம். அப்படி வேலை செய்து களைத்து இவர் இருந்தாலும் கொஞ்ச நேரம் ஃப்ரீ கிடைத்தாலும் குடும்பத்தோடு செலவிடவே விரும்புவாராம். வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய இரண்டு மகன்களோடு அதிக நேரம் விளையாடிக் கொண்டிருப்பாராம். அப்படி விளையாடும் போது கூட இவருடைய கை கால்களில் ஆங்காங்கே கெட்டுப் போட்டுக் கொண்டுதான் இருக்குமாம். பைட் சீன்களில் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் நடிக்கும் போது அடிக்கடி அவருடைய கால் கைகளில் அடிபட்டு இருக்கும் என்று அவருடைய மகன் கூறி இருக்கிறார்.

டம்மி துப்பாக்கியால் வந்த வினை
விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். சண்முக பாண்டியன் விஜயகாந்த் உடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதுபோல தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்காக விஜய பிரபாகரனும் காத்திருக்கிறாராம் .இந்த நிலையில் சண்முக பாண்டியன் தன்னுடைய அப்பாவை பற்றி பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு திரைப்படத்தில் சண்டைக் காட்சியில் டம்மி துப்பாக்கி வைத்து சுடும் காட்சி இருந்ததாம். ஆனால் அதை சுடுபவர் திடீரென துப்பாக்கியை அழுத்தியதால் விஜயகாந்தின் கண் புருவத்தில் அது துளைத்து விட்டதாம். இப்போதும் கூட விஜயகாந்துக்கு அந்த இடத்தில் எலும்பு இருக்காது என்று தெரிவித்திருக்கிறார் .இந்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்கள் பலரும் நடிப்பிலும்ந அரசியலிலும் உண்மையான மனிதர் விஜயகாந்த். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் விரைவில் அவர் நலம் பெற்று மீண்டும் பழையபடி வரவேண்டும் என்று கருத்து கூறி வருகின்றனர்.
-
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications