மருத்துவர் பணியில் இருந்து விலகிய நடிகர் விஜயகுமார் மகள்.. காரணம் இதுதானா? அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா டாக்டர் ஆக 25 வருடங்கள் பணி புரிந்து வந்த நிலையில் தான் டாக்டர் பணியில் இருந்து விலகி இருப்பதாக அனிதா பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
25 வருடங்களாக அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்த்து வந்த அனிதா தான் இந்த திடீர் முடிவு எடுப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி பெரிய விளக்கம் ஒன்று கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகர் விஜயகுமாருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. பல வருடங்களாக நடிகராக இருக்கும் விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து இப்ப வரைக்கும் நடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் விஜயகுமார் வீட்டில் அவருடைய இரண்டாவது மகள் அனிதாவை தவிர வேறு எல்லாருமே நடிகர்களாக இருக்கின்றனர்.
விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் முத்து கண்ணுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரோடு விவாகரத்து செய்து விட்டு விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளாவிற்கு வனிதா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருந்த நிலையில் மஞ்சுளா உடல்நிலை குறைபாட்டால் காலமானார்.
தற்போது விஜயகுமாரின் 2 மனைவியின் குழந்தைகளும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அதில் நடிகை வனிதா மட்டும் தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார். அதுபோல விஜயகுமாரின் மகள்கள் மற்றும் மகன்
என எல்லோரும் நடிகர்களாக இருக்கும் நிலையில் அவருடைய இரண்டாவது மகள் அனிதா மட்டும் டாக்டருக்கு படித்து வெளிநாட்டில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தான் அனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், பலர் விரும்பும் ஒரு கனவு வேலையில் நானும் இருந்தேன். ஆனால் இன்று நான் அந்த வேலையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற தைரியமான முடிவை எடுத்து வெளியேறி இருக்கிறேன். என் வாழ்க்கையில் முதல் பாதியில் நான் கடினமாக உழைப்பேன் என்று சொன்னேன் அதுபோலவே நான் 25 ஆண்டுகள் செய்தேன்.
நான் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 16 மணி நேரம் வேலை செய்தேன். குடும்பம், வேலை, நண்பர்கள் மற்றும் ஆரோக்கியம் என்று எல்லா விஷயங்களையும் சமநிலைப்படுத்தி இருந்தேன். நான் 50 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். அது ஒரு தைரியமான முடிவு. ஆனால் அந்த முடிவை சில வருடங்களாகவே யோசித்து தான் நான் இப்போது எடுத்து இருக்கிறேன்.
இனி என்னுடைய கனவுகளை பின்பற்றுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை உறுதி செய்து பல ஆண்டுகளாக இந்த ஓய்வூதியத்திற்கு திட்டமிட்டேன். அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் போது இந்த வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். மேலும் நாம் செய்த கடின உழைப்பு மற்றும் தியாகங்கள் அனைத்தையும் ஓய்வெடுக்கவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
அதுபோல உங்களுடைய கனவை உண்மையாக்க உணர்ச்சியுடன் இருங்கள். மகிழ்ச்சி என்பது உங்களுடையது.. ஒருபோதும் அதை கைவிடாதீர்கள். கண்களை மூடிக்கொண்டு உங்களுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். அது என்னன்னா உங்கள் ஆற்றல் வரம்பற்றது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications