என் நிலைமைக்கு காரணம் எங்க அப்பா தான்.. திடீரென விலகி விட்டேன்! அனிதா விஜயகுமார் வெளியிட்ட வீடியோ
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றி வந்தார். ஆனால் இப்போது தன்னுடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் குறித்து வீடியோ ஒன்றில் பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
சினிமாவில் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு மேலாக நடிகர் விஜயகுமார் இருந்து வருகிறார். விஜயகுமாரின் வீட்டில் அதிகமானோர் சினிமாவில் இருக்கிறார்கள். விஜயகுமாருக்கு இரண்டு மனைவி என்பது பலருக்கும் தெரிந்த கதைதான். அவருடைய மூத்த மனைவி முத்து கண்ணுவிற்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

பிறகு முத்து கண்ணுவோடு கருத்து வேறுபாடல் பிரிந்த விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மஞ்சுளா விஜயகுமார் தம்பதிக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அதுபோல மஞ்சுளா மற்றும் முத்து கண்ணு என இரண்டு மனைவி மற்றும் குழந்தைகளோடு விஜயகுமார் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
பிறகு மஞ்சுளா உடல் நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அதுபோல இந்த குடும்பத்தில் இருந்து நடிகை வனிதா மட்டும் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் விஜயகுமாரின் மகள்களில் அனிதா மட்டும்தான் சினிமாவில் எந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் டாக்டருக்கு படித்துவிட்டு வெளிநாட்டில் மருத்துவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த வருடத்தில் தான் தன்னுடைய மகள் தியாவிற்கு திருமணம் செய்து வைத்தார். அதற்கு பிறகு தான் மருத்துவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். அதுபோல சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
அதுபோல அனிதா விஜயகுமார் சோசியல் மீடியாவில் இதய நோய் மற்றும் பல நோய்களுக்காக ஆலோசனைகளையும் அடிக்கடி வழங்கி வருகிறார். சமூக வலைத்தளத்தில் தன்னிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வீடியோஸ் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அதிகமான ரசிகர்கள் நீங்கள் உங்களுடைய ப்ரொபஷனலில் உச்சத்தில் இருக்கும் போது எதற்காக விருப்ப ஓய்வு பெற்று வந்தீங்க என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு காரணம் நான் சின்ன வயசில் இருக்கும்போது எனக்கு டாக்டராக வேண்டும் என்று கனவு இருந்தது.
நான் எப்போதும் வீட்டில் டாக்டர் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன் அதனால என்னுடைய அப்பாவும் அம்மாவும் நான் டாக்டர் ஆவதற்கு சம்மதம் தெரிவித்து அதற்காக என்னை படிக்க வைத்தார்கள். எங்கள் வீட்டில் எல்லோரும் என்ன விருப்பப்படுகிறோமோ அதைத்தான் பெற்றோர்கள் செய்து தந்திருக்கிறார்கள். அதே போல நான் டாக்டராக வேண்டும் என்றதும் என்னை நடிக்க சொல்லி அவர்கள் கேட்கவில்லை.

எனக்கான தேவைகள் எல்லாவற்றையும் அவர்களே செய்து தந்தார்கள். அதனால் தான் என்னால் படிக்க முடிந்தது. அதுபோல எனக்கு ஆரம்பத்தில் இருந்து அவசர சிகிச்சை பிரிவில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. மக்களோடு பழக வேண்டும் மக்கள் கஷ்டப்படும் போதும் பதட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டேன்.
அதுபோல நான் படித்து முடித்ததும் 20 வருடங்கள் ப்ரொபோஷர் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயர்வு பெற்று கடைசியாக நான் 50 வயதில் ரிட்டையர்டு ஆகும் போது எமர்ஜென்சில் 15 வருடங்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பலர் உயிர் போற நேரத்தில் என்னிடம் சொல்லும் வார்த்தை ஒன்றே ஒன்றுதான் என்னுடைய குடும்பத்தை பாக்கணும், என்னுடைய மகனை பார்க்கணும், மகளைப் பார்க்கணும் என்று தான் எல்லோரும் கெஞ்சுவார்கள்.

நான் இதுவரைக்கும் சேர்த்து வைத்த சொத்து வேணும், நான் வாங்கி வைத்த பொருள்களை பார்க்கணும் என்று யாரும் கேட்டது கிடையாது. காரணம் எல்லோரும் கடைசியில் உறவுகளை மிஸ் பண்ணி இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அதனால் தான் நான் அதுபோல இருந்து விட கூடாது என்று நினைத்தேன். என்னுடைய வாழ்க்கைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு பணத்தை சேர்த்து விட்டேன்.
பிறகு என்னுடைய குடும்பம் உறவுகள் நண்பர்களோடு நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைத்துதான் நான் அதிகபட்ச சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போது என்னுடைய கேரியரில் இருந்து ரிட்டையர்டு வாங்கி விட்டு நான் வந்து விட்டேன். ஆனால் என்னை மாதிரி எல்லாராலும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் முடிந்த அளவிற்கு உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் நண்பர்களோடு நேரத்தை செலவிடுங்க.
உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் வாழ்க்கை என்பது ஒரு மிக மிகக் குறுகியது. யாருக்கு எப்போ என்ன நடக்கும் என்று தெரியாது .இருக்கிற நாள் வரைக்கும் நமக்கு பிடித்ததை செய்து விடுங்கள் என்று அந்த வீடியோவில் அனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications