முகத்தில் குறை! ஆனால் விஜயகுமார் பேத்தி இப்படி சொல்லுவாங்கன்னு நினைக்கல- பியூட்டிஷியன் ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் அது பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் தான் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தியாவின் திருமணத்திற்கு மேக்கப் செய்த பியூட்டிசியன் ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தியா செய்த நெகிழ்ச்சியான விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் தியா இவ்வளவு அழகாக இருந்தாலும் அவருடைய கண் பக்கத்தில் ஒரு வடு போன்று இருந்த மச்சத்தை மேக்கப் செய்து மறைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார் அதோடு அதற்கு தியா ஒரு காரணத்தை சொல்லி இருந்தார் என்றும் பியூட்டிஷியன் ஓப்பன் ஆக பேசியிருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Actor Vijayakumars granddaughter Diyas wedding beautician about she good character

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜயகுமாரின் வீட்டு திருமணம் பற்றி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. எந்த பக்கம் திரும்பினாலும் விஜயகுமார் வீட்டு திருமண புகைப்படங்கள் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு மேக்கப் செய்த பியூட்டிஷியன் அன்று திருமண வீட்டில் என்ன நடந்தது என்பது பற்றி பேசி இருக்கிறார்.

அதில் முதலில் என்னிடம் பேசும்போது எனக்கு தியா இவ்வளவு பெரிய பிரபலத்தின் வாரிசு என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் அங்கே போன பிறகு விஜயகுமார் குடும்பத்தை சார்ந்த எல்லோருமே என்னிடம் பாசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதோடு மணப்பெண் தியாவின் அம்மா அனிதா மற்றும் அவருடைய சித்திகளான ஸ்ரீதேவி, ப்ரீத்தி போன்றோரும் நாங்கள் செய்த மேக்கப் ஐ பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க.

Actor Vijayakumars granddaughter Diyas wedding beautician about she good character

அதோடு நான் வியந்து பார்த்தது தியாவை தான்.. காரணம் அவர் ஒரு மருத்துவராக இருக்கிறார், அதோடு இவ்வளவு பெரிய குடும்பத்தை சார்ந்தவர் ஆனால் தான் ஒரு பிரபலத்தின் வாரிசு என்று கொஞ்சம் கூட எந்த இடத்திலும் அவர் காட்டிக்கவே இல்லை. சாதாரண ஒரு பெண் போலத்தான் அவர் பழகிக் கொண்டிருந்தார். அதுபோல தியாவிற்கு முகத்தில் பெரிய அளவில் எந்த ஒரு மேக்கப்பும் போடவில்லை.

அவர் இயற்கையாக இருப்பது போன்றே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார். அவருடைய கண்களுக்கு மட்டும் தான் நான் கொஞ்சம் மேக்கப் கொடுத்து இருந்தேன். அதை பார்த்து எல்லோரும் பாராட்டி இருந்தனர். அதுபோல கண்களுக்கு பக்கத்தில் ஒரு பெரிய மச்சம் வடுபோல இருந்தது. அதை மறைக்கவா என்று கேட்டபோது அதற்கு தியா மறுத்துவிட்டார். அதற்கு காரணம் அந்த மச்சம் பிறந்து வளர்ந்து இத்தனை வருடங்களாக என் கூடவே இருக்கிறது.

Actor Vijayakumars granddaughter Diyas wedding beautician about she good character

அதை மறைத்து நான் போலியாக இருக்க விரும்பவில்லை. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் என்று சொல்லி இருந்தார். இது எனக்கு அதிசயமாக இருந்தது. இது போல எல்லோரும் நமக்கு இருக்கும் குறையை கூட நம்முடைய பலமாக எடுத்துக் கொண்டால் எதை நினைத்து பயப்படவும் வேண்டாம், அவமானப்படவும் வேண்டாம் என்று எனக்கு தோன்றியது. ஏனென்றால் தியாவில் முகத்தில் அந்த ஒரு மச்சம் மட்டும்தான் ஒரு குறை போல இருந்தது. அதையே எனக்கு பெருமை என்று தியா சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது என்று அந்த பேட்டியில் பியூட்டிஷியன் பேசியிருக்கும் நிலையில் அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+