எம்ஜிஆருக்கு பிறகு விஜய் தான்! மீனோடு அதிர்ச்சி கொடுத்த மீனவர்.. எஸ்.ஏ சந்திரசேகர் சொன்ன வார்த்தை
சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் சில தினங்களுக்கு முன்பு மீட்டிங் ஒன்று வைத்திருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் அம்மா சோபா கலந்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர் ஒருவர் கையில் மீனோடு வந்து விஜய்யை அடுத்த எம்ஜிஆர் என்று கூறி இருக்கிறார். அதற்கு எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய நன்றியை தெரிவித்து இருந்தார். அது பற்றி பார்க்கலாம்
நடிகர் விஜய்யின் பிறந்த நாளான இன்று அவர் தன்னுடைய பிறந்தநாளை தான் கொண்டாடப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்த நாளுக்காக அவருடைய அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யின் ரசிகர்கள் மீட்டிங்கில் பெரிய கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ரசிகர்கள் எங்களுக்கு விஜய்யை எதனால் பிடிக்கும் என்று கூறிக் கொண்டிருந்தனர். அதுபோல விஜய்யின் அப்பாவும், அம்மாவும் அந்த நிகழ்ச்சியில் விஜய் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் யூடியூப் சேனலில் பிரபலமாக இருக்கும் "தூத்துக்குடி மீனவன்" பெரிய ஒரு பாக்ஸை கொண்டு வந்து மேடையில் வைக்க அதை பார்த்த எஸ்.ஏ சந்திரசேகர் இது என்னவென்று குழப்பத்தில் இருந்திருக்கிறார்.
விஜய் அரசியல் வருகையை அந்த படத்திலேயே சொல்லிட்டாரு! பல பேர் முன்பு சொன்ன வார்த்தை.. பாஸ்கி ஓப்பன்
அப்போது யூடியூபர் தூத்துக்குடி மீனவன் எங்களுக்கு எம்ஜிஆருக்கு பிறகு விஜய் தான் எல்லாமே. எம்ஜிஆர்க்கு தான் எங்களுடைய கஷ்டங்கள் தெரியும். அவர்தான் மீனவ மக்களுக்காக பல உதவிகளை செய்தார். அதுபோல எங்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்காக விஜய் வந்திருக்கிறார். அவர் அரசியலில் வந்த பிறகு எங்களுடைய வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும்.
நாங்கள் ஸ்கூல் படிக்கும்போது கிளாஸில் எங்க பக்கத்தில் யாரும் உட்கார மாட்டாங்க. உங்க மேல ஒரு வாடை அடிக்குனு சொல்லி தள்ளி உட்காருவாங்க. இப்ப கூட சிலர் எங்களை ஏளனமாக தான் பார்க்கிறாங்க. விஜய் சாருக்கு வஞ்சரம் மீனு பிடிக்கும்னு தெரியும். அதனால் தான் அவருக்காக நேற்று நாங்கள் தூண்டில் போட்டு இந்த மீனை பிடித்துக் கொண்டு வந்திருக்கோம்.
ஆனால் இதை நீங்க கையால் வாங்குவீங்களா? இல்லையா? என்று எங்களுக்கு தெரியாது ஆனாலும் விஜய் சாருக்காக இதை வாங்குவீங்களா? என்று கேட்டு இருக்கிறார், அதற்கு எஸ்.ஏ சந்திரசேகர் என் பிள்ளைக்காக நீங்க இவ்வளவு பாசமா ஒரு கிப்ட் கொண்டு வந்து இருக்கீங்க. இதை நான் வேண்டாம்னு சொல்ல மாட்டேன். என் கையால் நானே வாங்கிக் கொண்டு போவேன்.
விஜய் உங்களுக்காக இன்னமும் அதிகமாக செய்வான். அவனுக்கு எப்போதுமே மக்கள் மீது தனி மரியாதை இருக்கிறது. அவன் யாரையும் பிரித்துப் பார்த்தது கிடையாது என்று அந்த மேடையில் எஸ்.ஏ சந்திரசேகர் பேசி இருக்கிறார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இன்று அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications