லியோ ஸ்டைலில் தோனி... வி.ஜே பாவனாவின் கமெண்டால் கழுவி ஊற்றும் விஜய் ரசிகர்கள்.. காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்த விஜே பாவனா 2017 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு பத்திரிக்கையாளராக தேர்வாகி இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் மற்றும் கபடி லீக்கில் ஒளிபரப்புகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் லியோ ஸ்டைலில் டோனியின் வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டு இருக்கிறது.

அந்த வீடியோவிற்கு கீழே பாவனா கொடுத்த ஒரு கமெண்டால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பாவனாவை கலாய்த்து கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இணையத்தில் இதுதான் வைரலாகி வருகிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

actor Vijay s fans irked VJ Bhavana release the command Dhoni in Leo style

அந்த வகையில் டோனியை புகழ்ந்து விஜய்யை விமர்சித்தபடி தொகுப்பாளினி பாவனா போட்டிருக்கும் பதிவு தான் இப்போது சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு விரைவில் தொடங்க இருக்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் நிகழ்ச்சி இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதுவரைக்கும் 16 சீசன்கள் வெற்றிகரமாக முடிவாக முடிவடைந்திருக்கும் நிலையில் விரைவில் 17வது சீசன் தொடங்குகிறது. அதுவும் வரும் மார்ச் 22ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனின் முதல் போட்டியே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதலில் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலன்சஸ் பெங்களூர் அணியும் மோத இருகிறார்கள்.

அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே சென்னையில் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் டோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இதற்கு காரணம் டோனி கடைசியாக விளையாடும் ஐபிஎல் சீசன் என்று கூறப்படுகிறது. தோனி 40 வயதை கடந்தாலும் தன்னுடைய பிட்னஸ் விஷயத்தில் கவனமாக இருப்பதால் இவர் இன்னும் ஒரு சில சீசன்கள் விளையாடுவார் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த சமயத்தில் இதுகுறித்து டோனி எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் விரைவில் வெளியிடுவார் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜே பாவனா தெரிவித்து இருந்தார். அதாவது சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது நான் ஐபிஎல் பார்ட்டியில் கலந்து கொண்டு இருந்தபோது தோனி தன்னுடைய பயணத்தை தொடங்கும் போது நீண்ட தலைமுடி வைத்திருந்தார். அதுபோல இப்போது நீண்ட தலைமுடியோடு ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருந்தார்கள் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

actor Vijay s fans irked VJ Bhavana release the command Dhoni in Leo style

இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தோனி சமீபத்தில் சென்னை வந்திருக்கிறார். அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று இருக்கிறார்கள். இது தொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் டோனிக்காக வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தனர். அதில் விஜய் நடிப்பில் வெளியான லியோ பட காட்சியை டோனிக்காக உருவாக்கப்பட்டிருந்தது.

அதில் டோனியின் பழைய புகைப்படத்தை எடுத்து கண்ணாடி எல்லாம் உடைத்து டோனிக்கு முடி வளர்ந்தது போல ஓவியம் வரைந்து இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் டோனியை வரவேற்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

actor Vijay s fans irked VJ Bhavana release the command Dhoni in Leo style

இதில் பாவனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரிஜினலை விட இந்த வீடியோ நன்றாகவே இருக்கிறது என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாய் இருக்கிறது என்று எதை வேணும்னாலும் பேசிவிடக்கூடாது. விஜய்க்கு என்ன குறைச்சல்? ஒரிஜினல் நன்றாக இல்லை என்று எப்படி இவர் பேசலாம் என்றெல்லாம் கேள்வி கேட்டு திட்டி விமர்சித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+