“ஓ போடு” ஜெமினியில் நாம பார்த்தது கிளைமாக்ஸ் இல்லையா..? அந்த பிரபலத்தால் மாறிப்போன கதை..!
சென்னை: இயக்குனர் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த ஜெமினி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்த இந்த படத்தில் வெளிவந்த 'ஓ போடு' பாடல் பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆகி இந்த படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது.

கேங்ஸ்டர் ஆக இந்த படத்தில் விக்ரம் கலக்கியிருப்பார். அவ்வளவு பெரிய வெற்றி பெற்ற ஜெமினி படத்தின் கதை மற்றும் கிளைமாக்ஸ் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
காதல் மன்னன்,அமர்க்களம், என்று அஜித்தை வைத்து மிகப் பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சரணுக்கு 2002 ஆண்டு விக்ரமை வைத்து ஜெமினி படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தது ஏவிஎம் நிறுவனம்.சரண் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தாலும் ஏ வி எம் நிறுவனம் சரண் சொன்ன ஜெமினி பட ஒரிஜினல் முழு கதையை ஏற்றுக்கொள்ளவில்லை.
இரண்டாம் பாதி துவங்கி கிளைமாக்ஸ் வரை கதைகளில் சில மாற்றங்களை மாற்றச் சொல்லி இருக்கிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர். சரண் முதலில் கூறிய கதைப்படி ஜெமினி படத்தில் விக்கிரமுக்கு ஆதரவாக இருக்கும் காவல் அதிகாரியாக கமிஷனர் சிங்கப்பெருமாள் வேடத்தில் நடித்திருந்த பிரபல மலையாள நடிகர் முரளி கதாபாத்திரம் கிளைமாக்ஸில் அந்த காவல் அதிகாரியே வில்லனாக மாறி விக்ரமுக்கு எதிராக திரும்புவதாக கதையை வடிவமைத்திருந்தார்.
ஆரம்பத்திலிருந்து நல்லவராக காட்டிவிட்டு இறுதியில் அவரை வில்லன் போல் காட்டுவதை விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அந்தக் கதாபாத்திரத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லியும், இது குறித்து பிரபல கதாசிரியர் பீட்டர் செல்வகுமார் இடம் கொஞ்சம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள் என்றும் இயக்குனர் சரணிடம் கூறியுள்ளனர்.

பீட்டர் செல்வகுமார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மூன்று முகம் உட்பட பல படங்களுக்கு கதாசிரியராக இருந்துள்ளார். அவரிடம் திரைக்கதை மாற்றத்தை குறித்து பேச இயக்குனர் சரனிடம் கூறியுள்ளனர். இரு மனதுடன் பீட்டர் செல்வகுமாரிடம் சென்ற இயக்குனர் சரண் கதை மற்றும் அதை எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து பேசி உள்ளார்.
ஜெமினி படத்தின் சரணின் ஒரிஜினல் கதையை கேட்ட பீட்டர் செல்வகுமார், நீங்கள் மக்களை ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் முட்டாள் ஆக்கினால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி திரைக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லியுள்ளார்.பீட்டர் செல்வகுமார் உடன் கலந்தாலோசித்த பின்பு திரைக்கதைகள் ஏற்பட்ட மாற்றம் தான் மலையாள நடிகர் முரளி நடித்த சிங்கப்பெருமாள் கதாபாத்திரம் கதைப்படி வேறு துறைக்கு மாறுதலாகி அந்த பதவிக்கு வினு சக்கரவர்த்தி புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டு கதாநாயகனுக்கு எதிராக மாறும் வில்லனாக காட்டப்பட்டிருப்பார்.
மக்களும் ஜெமினி படத்தில் இந்த கிளைமேக்ஸை அங்கீகரித்ததால்தான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்ற தகவல் தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications