என் பொண்ணு மாரிமுத்து தாத்தாவை பார்க்கணும்னு கேட்குறா.. தியேட்டரில் கூட.. நடிகர் விமல் எமோஷனல்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவர் இருந்து சில வாரங்கள் கடந்து விட்டாலும் அவரை மறக்க முடியாமல் பல தவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரோடு நெருங்கி பழகியவர்களும், அவருடைய உறவினர்களும் தொடர்ச்சியாக அவரைப் பற்றி பல நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் மாரிமுத்து இயக்கிய திரைப்படத்தில் நடித்த நடிகர் விமல் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த வகையில் நடிகர் மாரிமுத்துவுக்கு நிகர் அவர் மட்டும்தான். அவருடைய இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது என்று அதிகமான ரசிகர்களும், பிரபலங்களும் கூறி வருகின்றனர். அதுபோலத்தான் நடிகர் விமலும் கூறியிருக்கிறார். நடிகர் மாரிமுத்து ஆரம்ப காலகட்டத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளையும், போராட்டங்களையும் தாண்டி வந்தவர்.
மாரிமுத்து போன்ற ஒரு வைராக்கியமானவரை நான் பார்த்ததில்லை பல நாட்கள் சாப்பாடு இல்லாமல் பசியால் இருந்தாலும் தண்ணீர் குடித்து இருக்கிறார். அதுபோல அவருடைய கேரக்டரும் யாருக்கும் வரவே செய்யாது. எனக்கு மனது சரியில்லாமல் இருந்தால் நான் அவரிடம் போன் செய்து பேசினாலே போதும் நம்முடைய மனம் தெளிவடைய வைத்து விடுவார்.
பல போராட்டங்களுக்கு பிறகு தான் அவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக பெரிய அளவில் பிரபலம் கிடைத்தது. இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு என்னிடம் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட சொன்னார், எதிர்நீச்சல் என்கிற ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கு அது சரியா வருமான்னு தெரியவில்லை என்று, ஆனால் பிறகு சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னிடம் பலமுறை பெருமையாக பேசி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் மனதிலும் மாரிமுத்து சார் இடம் பிடித்திருந்தார். என்னுடைய குழந்தைக்கு மூனேகால் வயது தான் ஆகிறது. அவர் திண்டுக்கல்லில் என்னுடைய மனைவியோடு இருக்கிறார். அப்போது ஜெயிலர் திரைப்படம் பார்க்க குடும்பத்தோடு போயிருந்திருக்கின்றனர். அங்கே தியேட்டரில் படம் பார்க்கும்போது என்னுடைய மகள் அம்மா பாருங்க "எதிர்நீச்சல் சீரியல் தாத்தா" இங்க இருக்காரு என்று சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு 3 வயது குழந்தையின் மனதிலும் மாரிமுத்து சார் இடம்பிடித்து இருந்தார்.
சென்னைக்கு என் குழந்தையை கூட்டிட்டு நான் வரும்போது அவரை சந்திக்க வைங்க என்று என்னுடைய மனைவி சொல்லி இருந்தார். நானும் என்னுடைய குழந்தையை கூட்டிட்டு வந்து அவரை சந்திக்க வைக்க வேண்டும் என்று இருந்தேன். என்னுடைய குழந்தை பல விஷயங்களை அவரிடம் பேச வேண்டும் என்று சொல்லி இருந்தார். ஆனால் அதுவெல்லாம் நடக்காமல் போய்விட்டது என்று தன்னுடைய வருத்தத்தை நடிகர் விமல் கண்ணீரோடு பகிர்ந்து இருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications