ஏற்கனவே அனகோண்டானு என்னை வச்சி செய்றாங்க.. இப்போ இது வேறயா? மீம்ஸ் குறித்து விஷால் கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகர் விஷால் மதகஜராஜா திரைப்பட வெற்றிக்கு பிறகு தன்னை பற்றி பரவி வரும் மீம்ஸ்கள் குறித்து கலகலப்பாக பேசியிருக்கிறார். ஏற்கனவே அவரை அனகோண்டா என்று மீம்ஸில் கலாய்த்து வரும் நிலையில் இப்போது பாம்பு போன்ற ஒரு உருவத்தோடு தன்னை மீண்டும் தொடர்ப்பு படுத்தி வருவது குறித்து கிண்டல் செய்திருக்கிறார்.
சினிமாவில் நடிகர் விஷாலுக்கு தனி அடையாளம் இருக்கிறது. செல்லமே திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான விஷாலுக்கு சண்டக்கோழி, திமிரு போன்ற படங்கள் ஹிட் கொடுத்தன. இவரின் அப்பா பிரபல தயாரிப்பதாக இருந்ததால் விஷாலும் தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரித்து வந்தார்.

ஒரு பக்கம் சிம்புவை போல இவர் மீது அதிகமான புகார்களும், சர்ச்சைகளும் இருக்கிறது. அதிலும் இவர் சூட்டிங்க்கு சரியாக வரமாட்டார், ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்க மாட்டார், சூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரும் இவருக்காக காத்திருக்கும் போது விஷால் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பது என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கும் சர்ச்சைகளுக்கும் விஷால் அடிக்கடி பதிலடி கொடுத்தும் வருகிறார். சில வருடங்களாகவே விஷாலுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவருடைய படங்கள் பாக்ஸ் ஆப்பில் தோல்வி அடைந்து வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் அவருக்கு ஹிட் கொடுத்தது.

இந்த நிலையில் தான் தற்போது 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த முடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் விஷாலை பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.
விஷால் வயதான தோற்றத்தில் மைக்கை பிடிக்கும்போது அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தது. அதோடு பேச முடியாமல் அவர் சிரமப்பட்டார். அவருக்கு காய்ச்சல் என்று மேடையில் இருந்தவர்கள் சொன்னார்கள். ஆனாலும் விஷாலுக்கு என்ன ஆச்சு என்பது பலருடைய கேள்வி.

ரசிகர்கள் பலரும் விஷால் மீண்டும் பழைய நிலையில் வரவேண்டும் என்று கூறி வந்தனர். ஆனால் மதகஜராஜா திரைப்பட ரிலீஸ் அன்று விஷால் பழைய நிலையில் திரும்பி கெத்தாக வந்திருந்தார். இவருடைய மாற்றத்தை பார்த்ததும் பலர் வாவ் சொல்லி இருந்தனர். இந்த நிலையில் மதகஜராஜா எதிர்பார்க்காத அளவிற்கு பெரிய சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது கலந்து கொண்ட விஷால் தன்னுடைய திறை வாழ்க்கை குறித்தும் சர்ச்சைகள் குறித்தும் அது பேசியிருக்கிறார். அப்போது மதகஜராஜா திரைப்படத்தை வெற்றி பெற வைப்பதற்கு காரணம் சுந்தர் சி, விஷால் மற்றும் விஜய் ஆண்டனி என்று மூன்று பாம்பு போன்ற இமோஜியில் இவர்களுடைய மூன்று பேருடைய பெயரும் வைக்கப்பட்டிருக்கிறது.
அதை குறித்து தொகுப்பாளினி டிடி கேட்கும் போது விஷால் சிரித்திருக்கிறார். அதோடு ஏற்கனவே என்னை அனகோண்டானு வச்சி செஞ்சிட்டு இருக்காங்க. இதுல இப்ப வேற நீங்களும் அனகோண்டா போலவே போட்டு இருக்கீங்களே என்று சொல்ல, அவரோடு இருந்த விஜய் ஆண்டனியும் இப்போ மூன்று பாம்பா என்று கிண்டல் செய்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications