விஷ்ணுகாந்த் வெளியிட்ட பரபரப்பான அறிக்கை..ஒருவரை நம்பியதால் வந்த வினை..!வெளிவந்த உண்மை
சென்னை: சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பொய்யான திருமண வாழ்க்கையிலிருந்து தான் தப்பித்து விட்டதற்காக கடவுளுக்கு நன்றி கூறியிருக்கிறார்.
மேலும் நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை யாராவது தகர்க்க நேர்ந்தால் அதையும் வென்று காட்ட தயங்க மாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறார்.

விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் விஷ்ணுகாந்த் அவரோடு சிப்பிக்குள் முத்து என்று சீரியலில் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்கள் இருவரும் தங்களுடைய காதல் விஷயத்தை instagram மூலமாக ரசிகர்களிடம் பகிர்ந்து சில மாதங்களில் திருமணம் செய்திருந்தனர்.
எட்டு மாதங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் செய்து இருந்தனர். திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருப்பதாக விஷ்ணுகாந்த் கூறியிருந்தார். மீண்டும் பேசி சேர்ந்து விட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சி எடுபடவில்லை என்றும் கூறியிருந்தார். இருவரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய திருமண புகைப்படங்களை டெலிட் பண்ணி இருந்தனர்.
இந்த நிலையில் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருந்தனர். ஜாடை மாடையாகவும் பல பதிவுகளை வெளியிட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் சம்யுக்தா பற்றி இரண்டு ஆடியோக்களையும் விஷ்ணுகாந்த் வெளியிட்டு தன் மீது தவறில்லை என்றும் இந்த ஆடியோவை நான் ரெக்கார்டு செய்யவில்லை சம்யுக்தாவால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு அனுப்பியது என்றும் கூறியிருந்தார்.
விஷ்ணுகாந்த் காதலித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு நபரிடம் பேசிக் கொண்டிருந்ததும் அதில் நிரூபணம் ஆகி இருந்தது. இந்த நிலையில் இன்று விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், அனைவருக்கும் வணக்கம். ஒருவரை நம்பி எனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள் அந்த பொய்யான மற்றும் நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி.

அதுபோன்று எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும் நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை யாராவது தகர்க்க நேர்ந்தால் அதையும் வென்று காட்ட மீண்டும் தயங்க மாட்டேன் என்று அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இது குறித்து சம்யுக்தா எந்த பதிவுகளும் வெளியிடாத நிலையில் விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. ஒரு சில சம்யுக்தாவின் ரசிகர்கள் உங்களுக்கு சரியான வாழ்க்கையை வாழ தெரியவில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி பேருக்கு பாஸ்ட் இருக்கும் அதை இப்போது தோண்டி பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று அட்வைஸும் செய்து கொண்டிருக்கின்றனர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications